பலரும் அறிந்திடாத நடிகை ஸ்ரீபிரியாவின் நிஜ கணவர் இந்த பிரபலம் தான் என தெரியுமா..?

1970 மற்றும் 80-களில் தென்னிந்திய மொழி படங்களில் சக்கை போடு போட்ட நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஸ்ரீபிரியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நடிகை ஸ்ரீபிரியா 1994-ஆம் ஆண்டு முருகன் காட்டிய வழி எனும் திரைப்படத்தில் அறிமுக நடிகையாக அறிமுகம் ஆனதை அடுத்து 1974-ஆம் ஆண்டு கே. பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் விரும்பும் நடிகையாக மாறினார்.

நடிகை ஸ்ரீபிரியா..

நடிகை ஸ்ரீபிரியா சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரோடு பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் அவள் அப்படித்தான் எனும் திரைப்படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இவர் நடிப்பில் வெளி வந்த ஆடு புலி, ஆட்டம், பைரவி, திரிசூலம், நீயா, நட்சத்திரம், பில்லா, தீ, சிம்லா ஸ்பெஷல், வாழ்வே மாயம், நானே வருவேன் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றும் நிரந்தர இடத்தை பிடித்த படங்களாக உள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த டைரக்டராகவும் திகழ்கிறார்.

அந்த வகையில் நீயா மற்றும் நட்சத்திர படங்களை தயாரித்து நடித்திருக்க கூடிய இவர் நானே வருவேன், திருஷம் போன்ற படங்களை இயக்கியும் இருக்கிறார்.

ஸ்ரீப்ரியாவின் கணவர் யார் தெரியுமா..

நடிகை ஸ்ரீபிரியா 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் நடிகை லதாவின் சகோதரர் ராஜ்குமார் சேதுபதியை 1988-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த திருமணம் காதல் திருமணம் எனினும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை லதாவின் தம்பியான ராஜ்குமார் காஷ்மீர் காதலி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் திருமணம் செய்து கொள்ள முக்கிய பங்கு எடுத்துக் கொண்டவர் நடிகை ராதிகாவின் தாயான கீதா தான்.

தற்போது படங்களில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ரியல் எஸ்டேட் பிஸ்ன்ஸ்சை ஸ்ரீ பிரியாவின் கணவர் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் மிகவும் தைரியமான பெண்ணாக ஸ்ரீப்ரியா இருந்திருக்கிறார்.

தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் ஸ்ரீபிரியா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல் தொடர்களையும் இயக்கி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

சின்னத்திரை, பெரிய திரை, தயாரிப்பு என பண்முக திறமையை கொண்டிருக்கும் ஸ்ரீபிரியா தற்போது அரசியலிலும் களம் இறங்கி சக்கை போடு போட்டு வருகிறார். அந்த வகையில் இவர் நடிகர் கமலஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யக் கட்சியின் பேச்சாளராக விளங்குகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் கணவர் நடிகை லதாவின் சகோதரர் என்ற விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள். மேலும் இவரது கணவரும் பல திரைப்படங்களில் நடித்திருப்பதை அறிந்து சந்தோஷத்தில் ரசிகர்கள் திக்கு முக்காடி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் வைரலான விஷயமாக மாற்றி இருக்கிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version