ஸ்ரீரெட்டியின் இதை மட்டும் பாத்திருக்கிறேன்.. விஷால் பேச்சு.. மீண்டும் கிளம்பிய பூதம்.. பரபரப்பில் திரையுலகம்..!

மலையாள சினிமா நடிகர்களின் சேட்டைகள் குறித்து ஹேமா கமிட்டியின் அறிக்கை தென்னிந்திய திரை உலகை கிடுகிடுக்க வைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து மலையாள நடிகர் சங்க பொறுப்புகளில் இருந்து கூண்டோடு கலைக்கப்பட்டு இருக்கிறார்கள் முன்னணி நடிகர்கள்.

இந்த விவகாரத்தில் கேரளா அரசு என்ன விதமான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறத..? இந்த அறிக்கை மீதான தகவல்களைக் கொண்டு எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப் போகிறது…? என்று எதுவும் தெரியாமல் இருக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் ஆட்டம் கண்டு இருக்கிறது என தான் கூற வேண்டும்.

இந்நிலையில், நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபொழுது பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது இந்த கேரள திரையுலகில் நடந்துள்ள கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதுபோல் நடிகர் சங்கத்தில் தமிழ் நடிகைகள் யாராவது புகார் கொடுத்திருக்கிறார்களா.? அப்படி கொடுத்திருந்தால் அதன் மீது என்ன விதமான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறீர்கள்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த விஷால், அப்படி எந்த புகாரம் இதுவரை வரவில்லை என கூறினார். அப்போது, இடைமறித்த பத்திரிகையாளர் ஒருவர். உங்கள் மீதே ஸ்ரீரெட்டி என்ற ஒரு நடிகை புகார் கொடுத்திருக்கிறார். அதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பினார்.

இதை கேட்டு கொஞ்சமும் அதிர்ச்சியடையாத நடிகர் விஷால். ஸ்ரீரெட்டி என்பவரை எனக்கு தெரியாது. அவர் யாரென்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் செய்த சேட்டைகளை மட்டும் பார்த்திருக்கிறேன். இன்றைய உலகில் யார் மீது யார் வேண்டுமானாலும் குற்றம் சுமத்திவிட முடியும் புகார் சொல்லிவிட முடியும் என்ற நிலை இருக்கிறது.

ஆனால் அது உண்மையா..? இல்லையா..? என்பதை கண்டறிய வேண்டியது காவல்துறையும் நிதி துறையும் தான். நாங்கள் காவல்துறையும் அல்ல நீதித்துறையும் அல்ல நாங்கள் ஒரு நடிகர் சங்கம்.

என் மீது யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கிறார்கள். அதனை செய்தியாக பிரசுரம் செய்கிறீர்கள். ஆனால் அதில் இருக்கக்கூடிய உண்மை தன்மை என்ன..? என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

ஸ்ரீரெட்டி என்பவரை எனக்கு தெரியாது. அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது, அவர் செய்த சேட்டைகளை மட்டும் தான் நான் அறிவேன் மேலும் நடிகைகளுக்கு நான் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால்.

உங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் என்று யாராவது அழைத்தால் அவர்களை செருப்பை கழட்டி அடியுங்கள். இனிமேல் அப்படி யாரும் உங்களிடம் கேட்கக் கூடாது என்ற அளவுக்கு உங்களுடைய பதில் இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து. என பதிவு செய்திருக்கிறார் நடிகர் விஷால். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version