பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகையான ஸ்ரித்திகா தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
தொடர்ந்து தன்னுடைய சீரியல் பயணத்தை மேற்கொண்டு இருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.
சினிமாவில் அறிமுகமான முதல் தற்போது வரை தன்னுடைய கட்டழகு குறையாமல் முக அழகு மாறாமல் இன்னும் இளமையாகவே இருக்கிறார் நடிகை ஸ்ரித்திகா. சமீபத்தில் இவருடைய அழகின் ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்பியது என்னிடம் பலரும் இந்த கேள்வியை கேட்கிறார்கள்.
நான் அழகாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். ஆனால், மற்றவர்கள் உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்று கேட்கும் அளவுக்கு அழகாக இருக்கிறேன் என்றால் எனக்கு சந்தேகம் இருக்கிறது.
நானும் மற்றவர்களைப் போலத்தான் இருக்கிறேன். நான் அழகானவள் என்று எந்த ஒரு நினைப்பு எனக்குள் இருந்ததில்லை. ஆனால் மற்றவர்கள் இதனை கேட்கும் பொழுது அதனை உதாசீனப்படுத்தும் எனக்கு மனது வரவில்லை. ஒருவேளை நான் உதாசீனப்படுத்திய அவர்கள் மனதை புண்படுத்தி விடுமோ என்ற அச்சமும் எனக்கு இருக்கிறது.
நான் வேதிப்பொருட்கள் கலந்த மேக்கப் சாதனங்களை பயன்படுத்துவது கிடையாது. அதிகபட்சமாக நான் பயன்படுத்தக்கூடிய மேக்கப் சாதனங்கள் என்றால் கண்ணுக்கு காஜல்.. உதட்டுக்கு லிப் பாம் மட்டும் தான் பயன்படுத்துகிறேன்.
மற்றபடி செயற்கையான பவுடர்கள் முக அழகை கூட்டி காட்டக்கூடிய கிரீம்கள் என நான் எதையும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே சில நேரங்களில் பயன்படுத்தினால் கூட இரவு தூங்கும் முன்பு முகத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு அந்த மேக்கப்பை கலைப்பேன்.
செயற்கையான வேதிப்பொருட்கள் அந்த மேக்கப் ரிமூவர்களை நான் பயன்படுத்துவது கிடையாது. முக்கியமாக குளிக்கும் போது நான் அந்த தவறை செய்யவே மாட்டேன் அது என்னவென்றால் நான் சோப்பு ஷாம்பூ பயன்படுத்துவது கிடையாது.
மாறாக என் அம்மா அழைத்து கொடுக்கக்கூடிய கடலை மாவு, பாதாம் மாவு, பச்சை பயறு மாவு உள்ளிட்டவற்றை தான் நான் குளியலுக்கு பயன்படுத்துகிறேன். பணி நிமித்தமாக நான் வெளியே சென்றால் கூட இவற்றை என் கையோடு எடுத்துச் செல்வேன் என்று பேசியிருக்கிறார் நடிகை ஸ்ரித்திகா.