எம் ஜி ஆரிடம் காதலை சொன்ன நடிகை ஸ்ரீவித்யா..! அதுவும் எப்படின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இசை பாடகியாக திகழ்ந்த எம்எல் வசந்தகுமாரியின் மகளாக 1953-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி பிறந்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து இருக்கிறார். மேலும் இவர் தனது திரை வாழ்க்கையில் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகை ஸ்ரீவித்யா..

நடிகை ஸ்ரீவித்யா தனது குடும்பம் பொருளாதார ரீதியாக தத்தளித்த போது திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக 1966-ஆம் ஆண்டு வெளி வந்த திருவருட்செல்வர் என்ற திரைப்படத்தில் புகழ்பெற்ற நடிகர் சிவாஜி கணேசனோடு இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து பி. சுப்பிரமணியம் இயக்கிய குமார சம்பவம் மற்றும் தாசரி நாராயண ராவ் இயக்கிய தெலுங்கு படமான டாடா மனவாடு ஆகிய படங்களில் நடன காட்சியோடு நடித்த இவர் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழ் திரையுலகை பொருத்த வரை கே பாலச்சந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு படத்தில் ஒரு கல்லூரி மாணவியாக பேராசிரியை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார்.

மேலும் டெல்லி டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்ததை அடுத்து இவர் மக்கள் மத்தியில் நல்ல பேமஸான நடிகைகளில் ஒருவராக மாறினார். இதனை அடுத்து பாலச்சந்தர் இயக்கிய வெள்ளி விழா, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.

எம்ஜிஆரிடம் காதலை சொன்ன விதம்..

இந்நிலையில் இவர் நடிகையாக வலம் வருவதற்கு முன்பு அவரது அம்மா இவரை மிகச் சிறந்த பாடகியாக தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தார். எனினும் ஸ்ரீவித்யா நடிப்பின் மேல் கொண்டிருந்த ஆசையின் காரணமாக பின்னால் நடிகையாக ஜொலித்தார்.

சிறு வயதாக இருக்கும் போது இவர் வீட்டின் அருகில் தான் லலிதா ராகினி மற்றும் பத்மினியின் வீடு இருந்தது. இங்கு அவர்கள் நடனம் ஆடும் போது இவரும் சென்று அவர்களோடு இணைந்து நடனம் ஆடுவதோடு பாடலும் பாடி வருவார்.

அந்த சமயத்தில் அந்தச் சகோதரிகள் மூவரும் எம்ஜிஆர் பற்றி நடிகை ஸ்ரீவித்யாவிடம் கேட்ட போது ஸ்ரீவித்யா தனக்கு நடிகர் எம்ஜிஆரை மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

எப்படின்னு தெரிஞ்சா ஷாக்காவிங்க..

உடனே அந்தச் சகோதரிகள் நடிகர் எம்ஜிஆருக்கு போன் செய்து அந்த போனினை ஸ்ரீவித்யாவின் கையில் கொடுத்து விட்டார்கள். அப்போது ஸ்ரீவித்யா என்ன செய்தார் என்று கேட்டால் அசந்து போவீர்கள்.

போனை பெற்றுக் கொண்ட ஸ்ரீவித்யா எந்த விதமான தயக்கமும் பயமும் கொள்ளாமல் எதிரில் பேசுவது எம்ஜிஆர் என்று தெரிந்ததும் நான் ஸ்ரீ வித்யா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பேசியபடியே ஐ லவ் யூ என்று சொல்லி விட்டாராம்.

இது வரை வெளியே தெரியாத இந்த விஷயம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியாக இருக்கும் போதே எம்ஜிஆர்-க்கு ஐ லவ் யூ சொன்ன ஸ்ரீ வித்யா பற்றி அனைவரும் வியந்து பேசி வருகிறார்கள்.

மேலும் நடிகை ஸ்ரீவித்யா கமலஹாசனை காதலித்து வந்ததாகவும் எனினும் அவர் தாயாரின் சொல் கேட்டுத்தான் கமலை திருமணம் செய்து கொள்ளவில்லை போன்ற விஷயங்கள் ஏற்கனவே இணையங்களில் பரவியிருந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும்.

அது போலவே எம்ஜிஆருக்கு ஐ லவ் யூ சொன்ன விஷயம் தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version