தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. ஸ்ரீவித்யா குறித்து வெளியான ரகசியம்..!

தமிழ் மற்றும் மலையாள சினிமா இரண்டிலுமே அதிகமான வரவேற்பு பெற்ற நடிகையாக ஒரு காலத்தில் இருந்தவர்தான் நடிகை ஸ்ரீ வித்யா. 1967களில் இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீ வித்யா. மூன்று எழுத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஸ்ரீவித்யா.

ஆனால் அந்த திரைப்படங்களில் எல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. வெகு தாமதமாக 1975 ஆம் ஆண்டு வந்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்தான் ஸ்ரீவித்யா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை பெற்றார்.

அந்த திரைப்படம் பல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் முக்கிய திரைப்படமாக அமைந்தது. அந்த வகையில் நடிகை ஸ்ரீ வித்யாவிற்கும் அது முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே ஸ்ரீ வித்யாவிற்கும் கமல்ஹாசனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

காதல் கதை:

அதனை தொடர்ந்து அவர்களது காதல் வெகு காலங்களாகவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் பிறகு அவர்கள் இருவருமே பிரிந்து விட்டனர். அதற்கு ஸ்ரீ வித்யாவின் அம்மாதான் காரணம் என்று பொதுவாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரீவித்யாவின் இந்த தகாத உறவால் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான விஷயங்களை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கமல்ஹாசனுடன் உறவு ஏற்பட்ட பிறகு சரியான திருமண வாழ்க்கையே ஸ்ரீவித்யாவிற்கு அமையவில்லை எனக் கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

மேலும் அவர் கூறும் பொழுது கமல்ஹாசனுடன் காதல் தோல்வி ஏற்பட்ட பிறகு மலையாள துணை இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீ வித்யா. ஆனால் அந்த திருமண வாழ்க்கை அவருக்கு சரியாக அமையவில்லை.

திருமண வாழ்க்கையில் பிரச்சனை:

அவரது சொத்து சொத்தின் மீது ஆசைப்பட்டுதான் அந்த நபர் ஸ்ரீ வித்யாவை திருமணம் செய்திருந்தார். எனவே அவரது சொத்துக்கள் மொத்தத்தையும் அவர் அழித்துவிட்டார். சம்பாதித்த சொத்துக்கள் முழுவதையும் பறிகொடுத்து கடைசியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் ஸ்ரீ வித்யா.

அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்குதான் அவர் தனது இறுதி நாட்களை கழித்தார். சாகும் சமயத்தில் கூட திரும்ப கமல்ஹாசனை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஸ்ரீவித்யா.

ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை நிறைய பேட்டிகளில் கமல்ஹாசன் பேசும் பொழுது கூட ஸ்ரீவித்யாவை காதலித்ததை அவரே ஒப்பு கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version