எப்போ முதல் முறையாக பிட்டு படம் பார்த்தீங்க..? ஸ்ருஷ்டி டாங்கே கொடுத்த எதிர்பாராத பதில்..!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சினிமாவில் அறிமுகமான புதிதில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் திரைப்படத்தில் சுஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் வெளியான மேகா என்ற திரைப்படத்தில் நடிகர் அஸ்வின்-க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு, ஜித்தன் 2, தர்மதுரை, பொட்டு, சக்ரா, சந்திரமுகி இரண்டாம் பாகம் என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு போட்டி தொடங்கிய எட்டாவது நாளே வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு குக் வித் கோமாளி நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இப்படி திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே அவ்வப்போது தன்னுடைய படங்கள் வெளியாகும் நேரத்தில் youtube தளங்களில் பேட்டி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவிடம் நீங்கள் முதன்முறையாக எப்பொழுது பிட்டு படம் பார்த்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதனை கேட்டதும் கடுப்பாகி போன நடிகை ஸ்ருஷ்டி டாங்கே என்னை பார்த்து என்ன கேள்வி கேட்கிறீர்கள்..? இதெல்லாம் பொதுவெளியில் கேட்கக்கூடிய கேள்வியா..? என மைக்கை கழட்டி வீசிவிட்டு கோபமாக பேட்டியை விட்டு வெளியேறிவிட்டார்.

சில நிமிடங்கள் கழித்து தான் தெரிந்தது நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் அந்த நிகழ்ச்சியின் இயக்குனரும் சேர்ந்து கொண்டு தொகுப்பாளரை பிரான்க் செய்திருக்கிறார்கள் என்று.

இதனை சற்றும் எதிர்பாராத தொகுப்பாளர் அதிர்ச்சியில் உரைந்தவராக அமர்ந்து கொண்டு இருந்தார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam