சாப்பிட பிரைட் ரைஸ் கொடுத்த குழந்தை முதல்வர் மு க ஸ்டாலின் நிகழ்ச்சி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள வேட்பாளர்களுக்காக புயல் வேகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திராவிட முன்னேற்ற கழகமும் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களுக்கு பிரச்சாரம் செய்து வருகிறது.

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய ஈரோடு வந்திருந்தார்.

அவர் பிரச்சாரத்தை முடித்து கிளம்பும் நேரத்தில் ஒரு பெண் குழந்தை கையில் ப்ரைடு ரைஸை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுக்க வேண்டும் என பாதுகாவலர்களிடம் சொன்னார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் குறிப்பிடுகையில் ‘ ஈரோட்டில் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது ஒருவர் ஓடி வந்து தன் பெண் குழந்தையின் கையில் ஃப்ரைடேஸ் கொடுத்து என்னிடம் தரச் சொன்னார்.

எனது தொடர்ச்சியான பணிகளுக்கிடையே நான் சாப்பிட்டு இருப்பேனோ இல்லையோ என்று நினைப்பில், அதை செய்த அந்த தமிழரின் அன்பில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வை கண்டேன்! அந்த குழந்தை என்னிடம் உணவை தந்தவுடன் அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே தாத்தா என்று வாழ்த்துக்களை பகிர்ந்த போது நெகிழ்ந்து போனேன் என்று தன்னுடைய பிறந்தநாள் மடலில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது நிகழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.

இதுபோல பல சுவாரசியமான அரசியல் தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …