விஜய் அப்பார்ட்மெண்டில் வரிசையாக இடம் பிடிக்கும் நடிகைகள்!.. என்னவா இருக்கும்..!

தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் டாப் நடிகராக தற்சமயம் விஜய்தான் இருந்து வருகிறார். நடிகர் ரஜினியை விட குறைவான சம்பளம்தான் இவர் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் பிறந்த நாளில் இருந்தே அவரை குறித்து சச்சையான விஷயங்கள் நிறைய வலம் வந்து கொண்டிருக்கின்றன.

முக்கியமான விஜய் பிறந்தநாள் அன்று விஜய்யை வாழ்த்தும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகை திரிஷா. நடிகை திரிஷாவும் விஜய்யும் நெடுநாட்களாகவே நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

நிறைய திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது பலரும் அறிந்த விஷயம். இந்த நிலையில் திரிஷா லிப்டில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

விஜய் குறித்த சர்ச்சை:

அந்த புகைப்படம் அப்பொழுது அதிக சர்ச்சையானது. வெளிநாட்டுக்கு எங்கேயோ இருவரும் உல்லாசமாக பயணம் சென்று விட்டு அங்கிருந்துதான் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் என்று ஒரு பக்கம் பேச்சு இருந்தது.

மற்றொரு பக்கம் பார்க்கும் பொழுது விஜய் தங்கி இருக்கும் அதே அபார்ட்மெண்டில்தான் திரிஷாவும் வீடு வாங்கி தங்கி இருக்கிறார். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது என்று கூறப்பட்டது. இப்படியாக சர்ச்சைகள் போய்க் கொண்டிருக்கும் பொழுது இந்த அப்பார்ட்மெண்டில் இன்னும் நிறைய பிரபலங்கள் தங்களுக்கு வீடுகளை வாங்கி வைத்திருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

சொல்லப்போனால் அந்த அப்பார்ட்மெண்ட்டே ஒரு ஸ்டார் அப்பார்ட்மெண்டாக மாறி இருக்கிறது என்று கூறலாம். சமீபத்தில் நடிகை ரம்பாவும் கூட அதே கட்டிடத்தில் தனக்கு ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

வரிசையாக வரும் நடிகைகள்:

மேலும் இவர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் கூட சமீபத்தில் வைரலானது இந்த நிலையில் இன்னும் சில நடிகைகளும் அதே இடத்தில் அப்பார்ட்மெண்ட் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகையான சாய்பல்லவி நிக்கி கல்ராணியும் தற்சமயம் அங்கு வீடு வாங்கி இருக்கின்றானர். நடிகர்களை பொருத்தவரை நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் ஆர்யா இருவருமே அங்கே வீடுகள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்தது தளபதி விஜய் வீடு வாங்கியிருக்கும் இடத்திலேயே இத்தனை பிரபலங்கள் வீடு வாங்க என்ன காரணமாக இருக்க முடியும் என்று தான் இப்பொழுது பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version