வயிற்றுக் கோளாறு என்பது வலியை மட்டும் குறிப்பது இல்லை. இது வயிற்றின் மேல் பகுதி, அடிப்பகுதி போன்றவற்றில் ஏற்படும் வயிற்று வலிகளையும் வாயு பிரியாமல் உப்புசமாக இருப்பதையும் குறிக்கிறது.
எனவே அடிக்கடி உங்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்படுகிறதா? அப்படி செரிமானம் ஆகாமல் ஏற்படுகின்ற வயிறு கோளாறு மட்டுமல்லாமல் அனைத்து வகையான வயிற்றுக் கோளாறுகளுக்கும் இதை குடித்தால் உங்களுக்கு எளிதில் தேர்வு கிடைக்கும்.
👍அதிகாலையில் வெறும் வயிற்றில் இஞ்சியை கலந்து வெந்நீரில் காலை, மாலை என இரு வேலையும் குடித்து வந்தால் கட்டாயம் உங்களுக்கு இருக்கக்கூடிய வயிறு உபாதைகள் அனைத்தும் தீர்ந்து போகும்.
👍உணவு அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் இஞ்சியை தட்டி சூடாக இருக்கும் டீயில் போட்டு நன்கு கொதிக்க விட்டு குடிப்பதன் மூலம் உங்களுக்கு செரிமான பிரச்சனைகள், அஜீரணக் கோளாறுகள் இருந்தால் அனைத்தும் நீங்கிவிடும். இதனால் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை ஏற்படாமல் வயிற்று கோளாறுகள் எந்த வகையிலும் உங்களுக்கு ஏற்பட்டாலும் அதை இது சரி செய்து விடும்.
👍புதினாவை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கு செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருப்பதோடு வயிற்று உபாதைகளும் நீங்கிவிடும். எனவே புதினாவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை அடிக்கடி நீங்கள் குடிக்கலாம்.
👍 மாதுளம் பழத்தில் இருக்கக்கூடிய தோலினை நன்கு அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட வலிகள் மட்டுமல்லாமல் வயிற்றுப்போக்கு உங்களுக்கு சுலபமாக குணமாகும்.
👍மேலும் சூட்டினால் ஏற்படக்கூடிய வயிற்று வலிக்கு வெந்தயத்தை ஊற வைத்து அதை மோரில் கலந்து அப்படியே குடித்து வரலாம்.மேலும் நீங்கள் சுடுநீரில் சிறிதளவு பெருங்காய பொடி மற்றும் உப்பு சேர்த்து பருகினால் வயிற்று உப்புசம் தானாக அடங்கிவிடும்.
👍 வயிற்றுப் பொருமல் இருக்கக்கூடிய பட்சத்தில் நீங்கள் புழுங்கல் அரிசி வடித்த கஞ்சியில் சிறிது உப்பு மற்றும் பெருங்காயத்தை போட்டு குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நின்றுவிடும்.
👍 ஓம வாட்டர் ஜீரகத் தண்ணீர் போன்றவற்றை வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் வெண்ணையை கொடுக்கும் போது மிக எளிதில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வயிற்று சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.
மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ பண்ணாலே பாஸ்… கண்டிப்பாக வயிற்று உபாதைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.