சிம்புவுக்கு மாபெரும் கம் பேக் படங்களாக திகழ்ந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து கிருஷ்ணாவின் இயக்கத்தில் சிம்பு இணைந்து நடித்திருக்க கூடிய படம் தான் பத்து தல.
இந்த படத்தில் இவருடன் இணைந்து பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படமானது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த மப்டி என்ற படத்தின் ரீமேக் தான் இதில் நிழல் உலக தாதாவை தேடி போகும் ஒரு ரகசிய போலீசை பற்றிய கதை அம்சம் தான் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் மாதத்தில் இந்த பத்து தல படம் வெளியாகும் என்ற செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் இருப்பதால் இதன் ரீலிஸ்சை டிசம்பர் மாதத்தில் வைக்க முடியாது என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து எந்த படமானது வரும் நியூ இயர் அதாவது ஜனவரி மாதத்திற்கு வரலாம் என்று இதன் ரிலீஸ் தேதியை பட குழு தள்ளி வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வந்துள்ளது இதை அடுத்து அதிகாரப்பூர்வமான இந்த தகவலை விரைவில் இந்த பட குழு அறிவிக்கும் என்று தெரியவந்துள்ளது.
எனவே இன்னும் படப்பிடிப்பு வேலைகள் முற்று பெறாத நிலையில் தான் இதனது ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேட்ட பின்பு தான் சிம்புவின் ரசிகர்களுக்கு மூச்சு வந்துள்ளது என்று கூறலாம். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை காணும் ஆவலில் சிம்பு ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு போலவே பத்து தல திரைப்படமும் சிம்புவுக்கு மாபெரும் வெற்றியை தருவதோடு வசூலை வாரி குவித்து விடும் என்று அவரது ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.