இதுதான் கர்மாவா..இனியா நாயகி ஆல்யாவை பிரேக்கப் செய்த மானஸ்.. 4 வருடத்தில் ஆப்பு வைத்த சீரியல் நடிகை சுபிக்ஷா..

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகளின் வாழ்க்கையில் பிரேக்கப் மற்றும் விவாகரத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நடிகை ஆல்யா மானசா மானாட மயிலாட நிகழ்ச்சியில் தன்னோடு இணைந்து நடனமாடிய மானஸ் என்பவரை காதலித்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக உருகி உருகி காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து மானஸ் ஆலியாவை பிரேக் அப் செய்து விட்டார்.

இனியா நாயகி ஆல்யாவை பிரேக்கப் செய்த மானஸ்..

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் நடித்த ஆல்யா மானசா அந்தத் தொடரில் தன்னோடு இணைந்து நடித்த சஞ்சீவை காதலிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததை அடுத்து திருமணத்திற்கு முன்பே ஆல்யா கர்ப்பமானார்.

இந்நிலையில் இருவரும் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து ஆல்யாவின் காதலை அவர்கள் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பெற்றோரை எதிர்த்து திருமண வாழ்க்கையில் சஞ்சீவை கைப்பிடித்தார். முதலில் சஞ்சய் வீட்டிலும் எதிர்ப்பு இருந்த நிலையிலும் அவரது அம்மா இவர்களை ஏற்றுக் கொண்டார்கள்.

இந்நிலையில் மானஸ் ஆலியாவை பிரிந்த நிலையில் சீரியல் நடிகையும் டான்ஸருமான சுபிக்ஷா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதல் 2020 ஆவது ஆண்டில் கல்யாணம் என்ற பந்தத்தில் முடிந்து விட இவர்களது திருமணம் பிரம்மாண்டமான முறையில் கலா மாஸ்டர் மற்றும் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொள்ள குதூகலமாக நடந்து முடிந்தது.

4 வருடத்தில் ஆப்பு வைத்த சீரியல் நடிகை சுபிக்ஷா..

டான்ஸ் மாஸ்டராக விளங்கிய மானஸ் நீயா 2 படத்தில் வரலட்சுமி உடன் இணைந்து சில காட்சிகள் நடித்ததோடு மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அத்தோடு பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வரும் இவரை போலவே சுபிக்ஷா நீதானே என் பொன்வசந்தம் என்ற சீரியலில் அறிமுகமான பின்னர் சி வி குமார் இயக்கத்தில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்த கொற்றவை என்ற திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரஜினி சீரியலில் நடித்திருக்க கூடிய இவர் அடுத்தடுத்து சில சீரியல்களில் நடித்து வந்த சமயத்தில் மானசை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் என்ற விஷயங்கள் லீக் ஆகியுள்ளது.

இதுதான் கர்மாவா..

இந்நிலையில் தற்போது நடிகை சுபிக்ஷா தன் சமூக வலைத்தள பக்கத்தில் மானசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கி இந்த தகவலை உறுதி செய்ததை அடுத்து தற்போது கேரளாவை சேர்ந்த தொழில் அதிபரான அவினாஷ் வாசுதேவன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

மேலும் இந்த திருமணம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதை அடுத்து ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் ஆல்யாவை பிரிந்து சுபிக்ஷாவை கைபிடித்த மானசை தற்போது வேண்டாம் என்று நிராகரித்த சுபிக்ஷாவின் இந்த செயலை பார்த்து அடடா இதுதான் கர்மாவா? என்று ரசிகர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்து இணையத்தில் இந்த விசயத்தை வைரலாக மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version