முன்னாள் கணவர் குறித்து இனிமே வாய் திறக்க கூடாது.. சுசித்ரா விழுந்த பலத்த அடி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் நீ நான்கில் கலந்து கொண்ட பாடகி சுசித்ரா ஆரம்ப நாட்களில் வானொலியில் ரேடியோ ஜாக்கியாக பணி புரிந்தவர்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்ததோடு இவரை அனைவரும் ஆர்ஜே சுச்சி என்று பரவலாக அழைப்பார்கள். 

பாடகி சுசித்ரா..

மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இந்நிலையில் திரை உலகில் டாப் பின்னணி பாடகையாக இருக்கும் போதே இவர் ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் நடிகரான கார்த்திக் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்ந்து வரக்கூடிய இவர்கள் விவாகரத்துக்கு பிறகு சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் பிரபல சினிமா துறை சார்ந்த நபர்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார்.

இதனைப் பார்த்து திரையுலகம் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களும் முகம் சுளிக்க கூடிய வகையில் ஒவ்வொரு பிரபல நபர்களின் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருக்கக் கூடிய இவரை சினிமாவில் இருந்து ஓரம் கட்டியதை அடுத்து எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தார்.

முன்னாள் கணவர் குறித்து வாய் திறக்கக் கூடாது..

இந்நிலையில் மீண்டும் இந்த சுச்சி லீக்ஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வெடித்து வரும் வேளையில் youtube சேனல் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்த இவர் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்தி குமார் குறித்து படு மோசமான குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் திரை உலகில் நடக்கும் அவலங்களையும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும்  குற்றங்களையும் தோல் உரித்து காட்டிய இவர் சினிமா நட்சத்திரங்கள் கொடுக்கும் மது பார்ட்டி குறித்து பேசி பெரும் அதிர்ச்சியை தந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் பெரிய அளவில் இணையங்களில் மட்டுமல்லாமல் வெகு ஜன மத்தியிலும் பேசும் பொருளாகி விட்ட நிலையில் கார்த்திக் குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்த பாடகி சுசித்ரா மீது அவரது முன்னாள் கணவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

சுசித்ராவிற்கு விழுந்த பலத்த அடி..

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் கார்த்திக் குமார் குறித்து கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக் கால தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தன் கணவரை ஓர் இன சேர்க்கையாளர் என்றும் அவரும் நடிகர் தனுஷ், விஷால் ஆண்ட்ரியா, திரிசா என பலர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு அனைவரது முன்னிலையிலும் பகீர் ஷாக்கை கிளப்பினார்.

இந்நிலையில்  இனி மேல் தனது முன்னாள் கணவர் குறித்து அவதூறுகரமான தகவல்களை பேசக்கூடாது என்று பாடகி சுசித்ராவிற்கு இடைக் கால தடை விதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் இந்த விஷயங்களில் உண்மை உள்ளதா? இல்லையா? என்று தெரிவதற்கு முன்பே இப்படி ஒரு தடை உத்தரவை விதித்திருப்பதை எண்ணி முழித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam