பிக்பாஸ் சீசன் 8 இவர் இருக்காரா..? அப்படினா சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் துவங்கிய பொழுது குறைவான அளவில்தான் அதற்கு வரவேற்பு கிடைத்தது.

ஆனால் போகப் போக தற்சமயம் தமிழ்நாட்டிலேயே அதிகமாக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. எப்போதுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்கி அது முடியும் தருவாயில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்குவார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

ஏனெனில் இரண்டுக்குமே அதிகமான ஆடியன்ஸ் இருக்கும் காரணத்தினால் இரண்டு நிகழ்ச்சியையும் ஒரே நேரத்தில் விஜய் டிவி ஒளிபரப்புவது கிடையாது. எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும்.

 

சமீபத்தில் துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 5 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சென்று கொண்டுள்ளது. இதில் ஷாலின் சோயா மாதிரியான முக்கியமான நபர்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர். இதற்கு போட்டியாக சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பான போது கூட குக் வித் கோமாளிக்கான ரசிகர்கள் என்பது குறையவே இல்லை.

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் குக் வித் கோமாளி முடிவடைய இருக்கும் நிலையில் அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்குவது தொடர்பாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் எட்டில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்பது மக்கள் மத்தியில் பெரிய பேச்சாக இருந்து வருகிறது.

புதிய போட்டியாளர்:

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்கனவே சோயா அதிக பிரபலமாக இருப்பதால் அவரும் அவரது காதலரான டிடிஎஃப் வாசனும் சீசன் ஏட்டில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருக்கும் மா கா பா ஆனந்தும் சீசன் 8-ல் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு நடுவே பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா சாஜியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன இதற்கு நடுவே தற்சமயம் சினிமா குறித்து அதிக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த பாடகி சுசித்ராவின் கணவரான கார்த்திக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

கார்த்திக், தனுஷ் உடன் உறவில் இருந்தார் என கூறி ஏற்கனவே சுசித்ரா அவர் மீது கலங்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அதை துடைப்பதற்கான ஒரு விஷயமாக பிக் பாஸை அவர் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version