தனுஷிற்கு தெரிஞ்சே ஐஸ்வர்யாவுக்கு இந்த பழக்கம் இருந்துச்சு.. வெளுத்து வாங்கிய பாடகி சுசித்ரா…!

தமிழ் திரைப்படங்களில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட பாடல் ஆசிரியர், திரைப்பட இயக்குனர் என பன்முக திறமையை கொண்டிருக்கிறார்.

இவர் தன் அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் 2002-ஆம் ஆண்டு நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுக நாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்த திரைப்படம் வணிகரீதியில் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து மீண்டும் காதல் கொண்டேன் என்ற படத்தில் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார்.

நடிகர் தனுஷ்..

செல்வராகவன் மூலம் பட்டை தீட்டப்பட்ட படு மாசான நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கும் நடிகர் தனுஷ் 2003-ஆம் ஆண்டு திருடா திருடி 2004 -இல் சுள்ளான் 2006-இல் புதுப்பேட்டை, 2007-இல் பொல்லாதவன், 2011-இல் ஆடுகளம், 2014-இல் வேலையில்லா பட்டதாரி, 2015-இல் மாரி 2019 -இல் அசுரன் போன்ற திரைப்படங்களில் தனது அற்புத நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இது வரை நாற்பதற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், விஜய் விருதுகள், ஃபிலிம் பேர் விருதுகள், விகடன் விருதுகள், எடிசன் விருதுகள், தேசிய திரைப்பட விருதுகள் என பல விருதுகளை வென்று நிற்கும் ஒரு அற்புதக் கலைஞர்.

இவர் தனது சவுண்ட் பார் பிலிம்ஸ் மூலம் பல படங்களை தயாரித்திருக்கிறார். இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது மட்டுமல்லாமல் இவர் தயாரிப்பில் வெளி வந்த விசாரணை படத்திற்காக தேசிய விருதும் கிடைத்துள்ளது.

ஐஸ்வர்யாவுக்கு அந்தப் பழக்கம்..

திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே 2004 -ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேற்றுமையால் பிரிந்து வாழ்ந்து வரும் இவர்கள் விவாகரத்துக்காக குடும்ப நல கோர்ட்டை அணுகி இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் இணையங்களில் வெளி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இரண்டு குடும்பத்தாரும் இவர்கள் சேர்ந்து வாழ பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டும் ஐஸ்வர்யா அதற்கு ஒத்துப் போகாததால் இரு குடும்பத்தார் மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

மேலும் கணவனை விட்டு பிரிந்து வாழக்கூடிய ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்குவதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்ததை அடுத்து அண்மையில் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் பிரபல சினிமா பின்னணி பாடகி சுசித்ரா சமீபத்திய தன்னுடைய பேட்டி ஒன்றில் வெளியிட்டு இருக்கும் தகவல்கள் ஒவ்வொன்றாக நம் தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வெளுத்து வாங்கிய பாடகி சுசித்ரா..

அந்த வகையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஏன் விவாகரத்து பெற்றார்கள் என்று தனக்குத் தெரிந்த சில விஷயங்களை பாடகி சுசித்ரா பதிவு செய்திருக்கிறார். இந்த விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சிகள் ஆழ்த்தி இருக்கிறது.

 

அப்படி என்ன புதுசா பாடகி சுசித்ரா தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை பற்றியும் அவர்கள் விவாகரத்து குறித்தும் சொல்லி இருப்பார் என்று பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யக்கூடிய அந்த விஷயம் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?.

பாடகி சுசித்ரா இவர்கள் இருவரது விவாகரத்து குறித்து பேசும் போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒருவருக்கொருவர் சீட்டிங் செய்தார்கள். ஐஸ்வர்யாவுக்கு தெரிந்து நடிகர் தனுஷ் சீட்டிங் செய்தார். அது போல நடிகர் தனுஷ்க்கு தெரிந்தே ஐஸ்வர்யாவும் சீட்டிங் செய்திருக்கிறார்.

இதனால் பாதிக்கப்பட்டது இவர்களது குழந்தைகள் தான் என பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் பாடகி சுசித்ரா. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version