தனுஷ் பக்கத்துல இருந்தா இதை பண்ணுவேன்.. ஜெயிலுக்கு போகவும் ரெடி.. பாடகி சுசித்ரா கூறிய தகவல்..!

தமிழ் திரை உலகில் தற்போது மாஸ் நடிகராக இருக்கும் தனுஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது தந்தை மற்றும் சகோதரர் இயக்குனராக இருப்பதை அடுத்து இவரும் பன்முக திறமையை கொண்ட நடிகராக விளங்குகிறார்.

மேலும் தனுஷ் சிறந்த பாடகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் திரை உலகில் அளப்பரிய சாதனைகளை செய்து வரும் இவர் பற்றி பாடகி சுசித்ரா கூறிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ்..

துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான தனுஷ் ஆரம்ப நாட்களில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அடுத்தடுத்த படங்களில் தன்னை ஒரு மிகச் சிறந்த நடிகராக மாற்றிக் கொண்டார்.

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.

எந்த பிரிவினை தொடர்ந்து தனுஷ் தீவிரமாக சினிமாவில் கவனத்தை செலுத்தி வருவதோடு தன் மகன்களோடு அவ்வப்போது நேரத்தை செலவு செய்து வருகிறார் என்பதை உணர்த்தக்கூடிய புகைப்படங்கள் அடிக்கடி இணையங்களில் வெளி வரும்.

மேலும் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த கேப்டன் மில்லன் திரைப்படமானது கலவை ரீதியிலான விமர்சனத்தை பெற்றதை அடுத்து தனது அடுத்த படத்தில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வரும் தனுஷ் பற்றி பாடகி சுசித்ரா என்ன சொன்னார் தெரியுமா.

பக்கத்தில் இருந்தா இத பண்ணுவேன்..

அண்மை பேட்டி ஒன்றில் பேசிய பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் தன் பக்கத்தில் இருந்தால் அவருடைய கதையை முடித்து கட்டி விடுவேன். அந்த அளவு எனக்கு அவர் மீது கோபம் இருக்கிறது என்று பேசி புயலை கிளப்பிவிட்டார்.

தனுசை பொருத்த வரை அவர் ஒரு நல்ல தகப்பனாக பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்திருக்கிறார். எனக்குத் தெரிந்த வரை நடிகர் தனுஷ் அவருடைய திருமண வாழ்க்கையில் அவர் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு உண்மையாகத் தான் இருந்திருக்கிறார்.

ஆனால் அவருடைய மனைவி ஐஸ்வர்யா தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்ன தான் தனுஷ் மீது நல்ல பிம்பம் இருந்தால் கூட என்னுடைய வாழ்க்கையை அழித்தவர்.

பாடகி சுசித்ரா கூறிய தகவல்..

இதற்கு காரணம் என்னுடைய வாழ்க்கையை அவர் ஒரே ஒரு பிராங்க் மூலம் சீரழித்தவர். எனவே தனுஷ் ஒரு வேலை என் பக்கத்தில் இருந்தால் அவருடைய கதையை முடித்து கட்டி விடுவேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அதனால் ஜெயிலுக்கு போகவும் நான் ரெடி சந்தோஷமாக நான் ஜெயிலுக்கு போவேன் என கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து பாடகி சுசித்ரா பேசிய பேச்சானது மிகப்பெரிய அதிர்வலைகளை இணைய வட்டாரம் முழுவதும் கிடப்பி விட்டிருக்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் இருந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் அதிக அளவு பேசப்படுகின்ற பேசும் பொருளாக மாறி உள்ளது. அத்துடன் ரசிகர்கள் அனைவரும் குறித்து பாடகி சுசித்ரா பேசியதை அதிக அளவு பேசி பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version