அடிபடும் முக்கிய பெயர்.. மீண்டும் திரையுலகை அலற விட்ட சுசித்ரா..! வீடியோ கிளப்பிய புது புயல்..!

தமிழ் சினிமாவில் பாடகியாக பிரபலமானவர் தான் சுசித்ரா இவர் பாடகியாக மட்டுமில்லாமல் ஆர் ஜே-வாகாவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டி வந்தார்.

குறிப்பாக ரேடியோ மிர்ச்சி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

பாடகி சுசித்ரா:

சுசித்ரா தமிழ் ,மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமான பாடகியாக இருந்து வந்த இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்னவோ சுச்சி லீக்ஸ் மூலமாகத்தான்.

ஆம், இவரது பெயரில் ட்விட்டர் அக்கவுண்ட் ஒன்று இருந்தது. அதில் நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோ புகைப்படங்கள் மற்றும் நைட் பார்ட்டி பப்பு உள்ளிட்டவில் நடிகர் நடிகைகளின் கலாச்சாரம் குறித்த வீடியோக்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதனால் கோலிவுட் திரையுலகமே ஸ்தம்பித்து போய்விட்டது. இதில் சிக்கியவர்கள் ஆண்ட்ரியா, அனிருத், தனுஷ், நயன்தாரா, சிம்பு இப்படி பல நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் பெயர்கள் வீடியோக்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி பரப்பரப்பை கிளப்பியது.

அதன் பிறகு இதற்கு விளக்கம் கொடுத்த சுசித்ரா… என்னுடைய பெயரில் இருக்கும் இந்த அக்கவுண்ட்டை என்னுடைய கணவர் ஹேக் செய்து நடிகர் தனுஷிடம் கொடுத்துவிட்டார்.

பாலியல் தொல்லை கொடுத்த தனுஷ் ?

நடிகர் தனுஷும் என்னுடைய கணவரும் சேர்ந்துதான் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்டில் இப்படியாக புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்டு என்னுடைய வாழ்க்கையில் விளையாடி விட்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் தனுஷ் எனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி பகீர் கிளப்பினார்.

இதில் நடிகர் நடிகைகள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் ரொமான்ஸ் , படுக்கை , லிப்லாக் புகைப்படங்களும் வெளியாகிய தீயாய் பரவியது.

அனிருத் ஆன்ட்ரியா உடன் இருந்த புகைப்படம் , தனுஷ் திரிஷாவுடன் இருந்த புகைப்படம், சிம்பு நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் உள்ளிட்டவை வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து பாடகி சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மனநோயாளி என்றும் அவரது கணவர் கார்த்திக் குமாரே தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் பின்னர் அது பற்றி பெரிதாக. விஷயம் வெளிவராமல் அப்படியே அடங்கிப் போனது.

முன்னாள் கணவர் போலீசில் புகார்:

இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகும் மீண்டும் சுசித்ரா பேட்டிகளில் பங்கேற்று தன்னுடைய கணவரும் தனுஷும் ஓரினச் சேர்க்கை உறவில் ஈடுபட்டதாக கூறி மீண்டும் பரபரப்பை கிளப்பினார்.

மேலும் தனுஷும் என்னுடைய கணவரும் சேர்ந்து தான் என்னுடைய வாழ்க்கையை இப்படி அழித்து விட்டார்கள் என கூறி அடுத்தடுத்த புகார்களை கூறினார்.

இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான சுசித்ராவின் முன்னால் கணவரான கார்த்திக் குமார் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.

மேலும் கார்த்திக் குமார் சுசித்ரா மீது வழக்கம் தொடர்ந்து இருந்தார். இதை எடுத்து சுசித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம் சுசித்ரா பகிரங்கமாக கார்த்திக் குமாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் இனிமேல் கார்த்திக் குமாரை பற்றி. எந்த ஒரு நேர்காணிலும் பேசவே கூடாது என கூறியிருந்தார்கள்.

இந்த விஷயம் இப்படி இருக்க தற்போது மீண்டும் சுசித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

மன்னிப்பு கேட்ட சுசித்ரா:

அதாவது கார்த்திக் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கும் சுசித்ரா.

நான் இந்த மன்னிப்பு வீடியோவை பட்டினப்பாக்கம் போலீசார் சொன்னதால்தான் போடுகிறேன்.

அவர்கள் முதலில் எனக்கு அறிவுரை கூறினார்கள் அப்புறம் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். இதனால் தான் நான் இந்த மன்னிப்பு வீடியோவை போடுகிறேன்.

அடிபடும் முக்கிய பெயர்..

பட்டினப்பாக்கம் எஸ் ஐ விஜயலக்ஷ்மி மேடம்… ஏன் மன்னிப்பு கேட்க மாட்டேங்கிற?உன்னை உள்ள தூக்கி வச்சிடுவேன் என்றெல்லாம் என்னை மிரட்டினார்கள் என காவலர் ஒருவரையும் குறிப்பிட்டு பேசியுள்ளார் சுசித்ரா.

நான் மன்னிப்பு கேட்பதால் கார்த்திக் குபுகுபுன்னு வளர்ந்திடுவார் என கூறுகிறார்கள். அதற்கு முதலாவதாக என்னுடைய வாழ்த்துக்கள்.

ஆனால்….நீங்கள் நடித்து வெளிவரும் திரைப்படங்களுக்கு நான் எப்போதுமே உங்களை விமர்சிப்பேன் எனக்கூறி விவகாரத்துடன் மன்னிப்பு கேட்டார் சுசித்ரா.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக மீண்டும் சுசித்ராவின் விஷயம் படம் எடுத்த பாம்பு போல் ஆட ஆரம்பித்துவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version