பாடகி சின்மயிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மெல்லிய குரலில் வெஸ்டர்ன் கலந்து பாடுவதில் கைதேர்ந்த கலையாக வைத்திருந்தவர் தான் பாடகி சுசித்ரா.
இவர் முதன்முதலில் வானொலியில் ஆர் ஜே வாக தனது பணியை தொடங்கி அதன் பிறகு பின்னணி பாடகியாவும் தனது கேரியரை மாற்றிக் கொண்டார் .
பாடகி சுசித்ரா:
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடங்களை பாடி பிரபலமான பாடகியாக வளம் வந்து கொண்டிருந்தார்.
இதனிடையே அவர் திரைப்படங்களில் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் . இந்த சமயத்தில் தான் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் வாயிலாக அவர் நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகள் வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் சுசித்ரா மிகவும் மோசமானவராக சித்தரிக்கப்பட்டார். அது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷால் தான் கற்பழிக்கப்பட்டதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவரே வெளியிட்டதால் அது பேர் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதை அடுத்து சில காலம் சுசித்ரா ஆல் அட்ரஸ் இல்லாமல் லண்டனுக்கு போய் செட்டில் ஆகிவிட்டார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரான கார்த்திக்கும் அவரை விவாகரத்து செய்து பிரிந்து சென்று விட்டார்.
சுசித்ராவின் அதிர்ச்சி பேட்டி:
இந்நிலை பல வருடங்கள் கழித்து சமூக வலைதளங்களில் பேட்டி கொடுத்து வரும் சுசித்ரா தன்னுடைய. வாழ்க்கை முழுக்க அழிந்து போனதற்கு காரணமே நடிகர் தனுஷும் தனது முன்னாள் கணவருமான கார்த்திக் தான் என்று பரப்பரப்பை கிளப்பி இருந்தார்.
மேலும் கார்த்திக், நடிகர் தனுசுடன் சேர்ந்து பிராங் செய்யும்போது நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகளின் புகைப்படங்களை வெளியிடுவதற்கு ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் அவங்களுக்கு தேவைப்பட்டது அந்த சமயத்தில்தான் என்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டை தனுஷிடம் கொடுத்து என்னுடைய வாழ்க்கையில் விளையாடி விட்டார்கள் எனக்கூறி அதிர வைத்தார்.
மேலும் திரிஷா , தனுஷ், ஆண்ட்ரியா, அனிருத் உள்ள பல் உள்ளிட்ட பல பிரபலங்களை குறித்தும் அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வந்தார்.
வனிதா மகள் குறித்து பரபரப்பு பேச்சு:
இந்நிலையில் தற்போது பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா விஜயகுமார் மகள் ஜோதிகா குறித்து பேசி பரபரப்பு கிளப்பு இருக்கிறார்.
நான் போன வருஷமே சொல்லிருந்தேன் ஜோவிகாவை தயவு செய்து சினிமா பக்கமே வந்துராத…இது மோசமான உலகம் இங்கெல்லாம் உனக்கு செட்டே ஆகாது.
குக், செஃப் அந்த மாதிரி வேற எதாவது ஒரு துறையில் உன்னுடைய பயணத்தை தேர்ந்தெடுத்துக் கொள். தயவு செய்து சினிமா பக்கமே வந்துவிடாதே என்று எத்தனையோ முறை படிச்சு படிச்சு கூறி இருக்கிறேன்.
அவளும் சினிமா பக்கம் வரமாட்டேன் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தால். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அவருடைய அம்மா கொடுத்த டார்ச்சரின் பெயரில் தான் இந்த அளவுக்கு மாற்றமடைந்திருக்கிறாள்.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த ஜோவிகாவே இப்போது கிடையாது. தன் மகளை ட்ரெயின் பண்ணி ட்ரெயின் பண்ணி இப்போ இந்த அளவுக்கு மாற்றிவிட்டால்.
பகீர் கிளப்பும் சுசித்ரா:
கவர்ச்சி போட்டோ ஷூட், பேசும்போதெல்லாம் நான் ஒரு நடிகையாக போகிறேன் என பல இடங்களை சொல்லு என சொல்லி சொல்லி அந்த குழந்தையை மாற்றி வைத்து விட்டாள் வனிதா.
இப்போ வில்லுக்கு ரொம்ப தகுதியானவளாக மாறிவிட்டால் ஜோவிகா. எப்பவுமே ஒரு குழந்தைக்கு அவருடைய அம்மா சரி இல்லை என்று சுத்தி இருக்கிறவங்க எல்லாம் சொல்லி தெரிந்து விட்டது என்றால் அந்த அம்மாவின் புத்தி அந்த குழந்தைக்கும் தொற்றிக் கொள்ளத்தான் செய்யும்.
அப்படித்தான் இப்போது ஜோவிகாவும் வனிதாவைப் போலவே மாறிவிட்டாள் என சுசித்ரா பேட்டியில் கூறி அதிர வைத்திருக்கிறார்.