திடீரென கோபப்பட்ட KS ரவிகுமார்..! மேடையிலேயே கெட்ட வார்த்தை.. அதிர்ந்த சரத்குமார்…!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வருபவர் தான் கே எஸ் ரவிக்குமார். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் .

குறிப்பாக தமிழில் பல்வேறு வெற்றி படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராகவும், படங்களில் கோடி கணக்கில் வசூல் சாதனை படைத்தது வந்தார்.

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்:

அவரது திரைப்படங்கள் வெளியானாலே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி படமாக அறியப்படும். இயக்குனர் விக்ரமானிடம் இணை இயக்குனராகப் பணியாற்றி படம் இயக்கும் நேக்குகளை அறிந்துகொண்டு பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

இதனிடையே குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். 1990 ஆம் ஆண்டு ரகுமான் வைத்து புரியாத புதிர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் .

தொடர்ந்து சேரன் பாண்டியன், புத்தம், புது பயணம் ,பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், நாட்டாமை, பெரிய குடும்பம், முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா, தெனாலி பஞ்சதந்திரம், எதிர் நாயகன், தசாவதாரம், ஆதவன் , மன்மதன் அம்பு , லிங்கா உள்ளிட்ட பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார்.

இவரால் இத்தனை பெரிய ஹிட் படங்கள் இயக்கியது என அவரை பார்த்தால் அவ்வளவு ஆச்சரியப்படுவார்கள்.

குணசித்திர நடிகராக கே எஸ் ரவிக்குமார்:

அந்த அளவுக்கு பார்ப்பதற்கு மிகவும் எளிமையான தோற்றத்தை வைத்துக்கொண்டு மாபெரும் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்டார்.

இதனிடையே அவர் நடிகராக பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர ரோல்களிலும் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும், திரைப்படத்தில் நடிகராக இவரது பயணம் ஆரம்பித்தது. குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா, தங்க மகன் , ரெமோ, கோமாளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் குணச்சித்திர வேதங்களிலும் நடித்து நடிகராக மக்கள் மனதில் இடத்தை பிடித்திருக்கிறார்.

இதனிடையே இயக்கம் நடிப்பு எனப்படும் பிஸியாக இருந்து வரும் கே எஸ் ரவிக்குமார் சமீபத்திய YouTube சேனலுக்கு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.

அவருடன் பிரபல நடிகரான சரத்குமாரும் பங்கேற்று பல விஷயங்களை குறித்தும் திரைப்பட எடுப்பதை பற்றியும் திரைப்பட அனுபவங்களை பற்றியும் பகிர்ந்து கொண்டார்கள்.

கெட்டவார்த்தையால் திட்டிய கே எஸ் ரவிக்குமார்:

அப்போது ஆங்கர் எ கே எஸ் ரவிக்குமாரை பார்த்து நீங்கள் செட்டில் பயங்கரமாக எல்லோரையும் கெட்ட வார்த்தையில் திட்டுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் என்ற கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு உடனே கே எஸ் ரவிக்குமார் கெட்ட வார்த்தை யார் தான் பேசவில்லை? இங்கிருந்து வெளியே போன உடனே பேசுற எல்லா கெட்ட வார்த்தையும் சாதாரணமா எல்லாரும் பேசுவாங்க என்று சொல்லிவிட்டு அப்படியே கெட்ட வார்த்தைகள் சரளமாக பேசினார்.

மேலும்… டேய் என்னடா புடுங்கிட்டு இருக்க சீக்கிரம் வா என்று சொல்லுவேன். இதெல்லாம் ஒரு கெட்ட வார்த்தையா எனக்கு தெரியல அப்படின்னு ரொம்பவும் சுலபமாக சாதாரணமாக பேசினார்.

இதை பக்கத்தில் இருந்து கேட்ட நடிகர் சரத்குமார் செம ஷாக்கிங் ஆன ஒரு ரியாக்ஷனை கொடுத்தார். இதை அடுத்து கேள்வி கேட்ட ஆங்கரும் சற்று பதறிப் போனார் என தான் இருந்தாலும். பல பேர் பார்க்க போகும் யூடியூப் சேனல் என்று தெரிந்தும் இப்படியா மோசமாக பேசுவது என பலரும் கே எஸ் ரவிக்குமாரை திட்டி திட்டி வருகிறார்கள்.

இருந்தாலும் இதெல்லாம் சினிமா துறையில் மிகவும் சாதாரணமான விஷயம் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version