இறுதிச்சுற்று என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இளம் பெண் இயக்குனரான சுதா கொங்கரா. இதை அடுத்து இவர் இயக்கிய சூரரைப் போற்று படம் பல தேசிய விருதுகளை அள்ளிக் குவித்தது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார் மேலும் இந்த படமானது ஒரு ஹிந்தி ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தப் படத்தில் ஏன் டக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்கி ஒரு ரூபாய்க்கு விமானத்தில் பறக்கலாம் என்று ஏழைகளின் கனவை நினைவாக்கிய ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான் சூரரைப் போற்று.
இந்தப் படத்திற்குப் பின்பு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இவர் அடுத்த படமாக எதை செய்வார் என்று ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்கக்கூடிய வேளையில் ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை சுதா தற்போது கையில் எடுத்திருக்கிறார். இதை இவர் படமாக்கும் முயற்சிகள் இறங்கியுள்ளது தற்போது வெளிவந்திருக்கிறது.
இதனை அடுத்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது ரத்தன் டாட்டாவாக யார் நடிப்பார்கள் என்ற கேள்விகள் வலுவாக எழுப்பப்பட்ட நிலையில் இந்த கேரக்டர் ரோலை நிச்சயமாக சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் செய்வார் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தெரிகிறது.
மேலும் இந்த படத்தை 2013 ஆம் ஆண்டு தொடங்க சுதா திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.எனவே மீண்டும் ஒரு மாஸ் வெற்றியை நிச்சயம் சுதா இந்த படத்தில் தருவார் என்று ரசிகைகள் இப்போதே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். எனவே இந்தப் படமும் விருது லிஸ்டில் இடம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் இந்த படத்திற்கு வலு செய்கின்ற வகையில் நடிகர்கள் பட்டாளம் தேர்வு விரைவில் நடக்கும் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க கூடிய இந்த ரத்தன் டாடா கதையை படமாக்குவதின் மூலம் வருங்கால தலைமுறைக்கு ஒரு இந்திய தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு மிக விரைவில் சென்றடையும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.