டி ஆர் ராஜேந்திரனின் மூத்த மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு பற்றி உங்களிடம் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. குழந்தை நட்சத்திரமாக திரையிடத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் பன்முக திறமையை கொண்ட அசாத்திய திறமைசாலி.
லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சிம்புவின் ஐம்பதாவது படம் குறித்த மாசான தகவல் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சிம்பு..
தமிழ் திரையுலகில் தனது அசாத்திய திறமையின் மூலம் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு சூப்பர் ஸ்டாரை போல லிட்டில் சூப்பர் ஸ்டாராக உலா வரும் நடிகர் சிம்பு நம்ம வீட்டு செல்ல பிள்ளை என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த வெந்து தணிந்தது காட்டு திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதோடு பத்து தல படத்தில் இவர் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்ற வசனத்திற்கு ஏற்ப திரை உலகில் மீண்டும் தன் ஆட்சியை நிலை நிறுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது கமலஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளி வரவுள்ள திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இது இவரது 48-வது திரைப்படம் ஆகும்.
இந்தப் படம் முடிந்து விட்டால் அதைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்க இருக்கக்கூடிய படத்தில் நடிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் சிம்புவின் ஐம்பதாவது படம் குறித்து தகவல்கள் வெளி வந்துள்ளது.
சிம்புவின் ஐம்பதாவது படம்..
சிம்புவின் ஈஸ்வரன் படம் சரியாக போகவில்லை அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க அந்த படம் பிளாக் பாஸ்டராக சிம்புவுக்கு வெற்றியை தந்தது. வெங்கட் பிரபுவின் மேக்கிங் ரசிகர்களுக்கு பிடித்துப் போக 100 கோடி ரூபாய் வசூலை அந்த படம் தந்தது.
இதனை அடுத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் தனது அசாத்திய திறமையை மீண்டும் திரையுலகுக்கு நிரூபித்த சிம்பு பத்து தல படத்தில் சரியாக ஜொலிக்கவில்லை.
இதனை அடுத்து 48 வது படத்தில் நடித்து வரக்கூடிய இவர் கமலஹாசனின் தக் லைப் படத்திலும் நடிக்க இருப்பதாக விஷயங்கள் கசிந்து வந்தது.
வெளிவந்த மாஸ் தகவல்..
இதனை அடுத்து தற்போது சுதா கோங்குரா இயக்கத்தில் சிம்பு தனது ஐம்பதாவது படத்தில் கமிட்டாகி இருப்பதாக புதிய தகவல்கள் வெளி வந்துள்ளது.
ஏற்கனவே சூரரை போற்று படத்தை இயற்றிய சுதா கோங்குரா சிம்புவிடம் கதை சொல்ல அந்த கதை அவருக்கு பிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் சுதா கோங்குரா இயக்கினால் நிச்சயமாக சிம்புவின் ஐம்பதாவது படம் பட்டாசாய் வெடிக்கும் எனக் கூறியிருக்கிறார்கள்.
மேலும் சுதா கோங்குரா தற்போது சூர்யாவை வைத்து புறநானூறு என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை அடுத்து சிம்புவின் ஐம்பதாவது படத்தை இயக்கலாம் என்ற விஷயங்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.