நடிகை சுஜாதா மர்ம வரலாறு..! பலரும் அறியாத உண்மை தகவல்கள்..!

தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கக் கூடிய நடிகை சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் படித்து வளர்ந்தது எல்லாம் நம் அண்டை நாடான இலங்கையில் தான். இவரது தந்தை இலங்கையில் இருந்த ராயல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்ததை அடுத்து தனது பள்ளி பருவம் முழுவதும் இலங்கையிலேயே கழிந்தது.

நடிகை சுஜாதா..

நடிகை சுஜாதாவின் தந்தை ஓய்வு பெற்றதை அடுத்து கேரளாவிற்கு திரும்பி வந்த இவர்கள் எர்ணாகுளத்தில் குடியேறினர்.

இவர் தனது தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மலையாள சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் மலையாளத்தில் அம்மு, காட்டுப் பூக்கள் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

அது மட்டுமல்லாமல் 1973-ஆம் ஆண்டில் சுழி என்ற படத்தில் நடிகை சாவித்திரிக்கு மகளாக நடித்த சுஜாதா மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 35-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கிறார் என்றால் எவ்வளவு பிஸியாக இருந்திருப்பார் என்று பாருங்கள்.

மேலும் பல படங்களில் இரண்டாம் கட்ட கதாநாயகியாக நடித்த இவர் 1994-ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளி வந்த அவள் ஒரு தொடர்கதை படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

நடிகை சுஜாதாவின் மர்ம வரலாறு..

இனிமேல் 1977-ஆம் ஆண்டு ஜெய்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவரது மகள் இதய நோய் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

நடிகை சுஜாதா மரணத்தை தழுவும் வரை எந்த ஒரு படத்திலும் ஆபாசமாக நடிக்காதவர். அது மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகையாக விளங்குகிறார்.

யாருக்கும் தெரியாத சில உண்மைகள்..

திருமணம் ஆனதை அடுத்து சுஜாதாவை சுற்றி ஒரு வேலி உருவாக்கப்படுகிறது. இதற்கு யார் காரணம்? என்ன காரணம்? என்பதை அவரது மரணம் வரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த வேலியைத் தாண்டி எதனால் சுஜாதாவால் வெளியே வர முடியவில்லை என்ற உண்மையும் புரியவில்லை.

அந்த வகையில் கணவர் ஜெயிகர் சுஜாதாவை இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்து அவரை கஷ்டப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து சினிமாவில் புக் செய்ய, கதை சொல்லவும் ஷூட்டிங் காண டேட் பெறுவதுமே ஒரு மிகப்பெரிய சிரமமான வேலையாக இருந்தது.

மேலும் யாரும் எளிதில் சுஜாதாவை சந்திக்கவும் பேசவோ சினிமா துறையில் இருக்கே மிகவும் கடினமாக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு பொது நிகழ்வுகளிலும் அதிக அளவு கலந்து கொள்ளாமல் இருந்த இவர் சிவாஜியின் இறப்பை அடுத்து இவரிடம் பேட்டி எடுக்க நிருபர்கள் முயற்சி செய்த போதும் தோல்வி தான் ஏற்பட்டது.

இவர் இறப்பு வரை அவர் மனதில் எந்த பாரத்தை சுமந்து இருந்தார் என்பது தெரியாமலேயே போய்விட்டது. இப்போது இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் சுஜாதாவின் வாழ்க்கையைப் பற்றி வைரலாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version