“அந்த கருப்பு பொட்டு.. வேற லெவல்ங்க..” – இணையத்தை அலற விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

சுஜிதா தனுஷ், தன்னுடைய சிறு வயதிலிருந்தே சினிமாவில் பயணித்து வரும் ஒரு நடிகை ஆவார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்து இருக்கிறார்.

தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்து இருக்கும் இவர் தற்போது விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது சீரியல்களில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவர் நடிகர் ரஜினிகாந்த், அஜீத், மாதவன், மம்முட்டி, மோகன்லால், நாகார்ஜுனா போன்ற பிரபல நடிகர்களின் படங்களில் நடித்து தன்னுடைய முகத்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற நாடகத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக உருவெடுத்த நடிகை சுஜிதா இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனிதன், நடிகர் சத்யராஜின் பூவிழி வாசலிலே, நடிகர் அஜித்தின் வாலி, இருவர். பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார் சுஜிதா.

தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா தனுஷ் அப்போது தன்னுடைய புகைப்படங்களை வீடியோக்களை இணையத்தில் பதிவு விடுவது வாடிக்கை.

அந்த வகையில் புடவை சகிதமாக அழகு கொஞ்சும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த கருப்பு பொட்டு வேற லெவல்ங்க என்று அம்மணியின்ன் அழகை உருக உருக வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …