சீரியலில் புடவை சகிதமாக வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா-வா இது..? – வைரலாகும் புகைப்படங்கள்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர் தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஒரு கை ஓசை என்ற சீரியலிலும் நடித்து இருந்தார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் இவருடைய பெயர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி உள்ளது. சின்னத்திரையில் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி, மைதிலி, விளக்கு வச்ச நேரத்துல ஒரு கை ஓசை, மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் இவர்.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிக கவர்ச்சி காட்டாமல் குடும்பபாங்கான உடைகளை அணிந்துகொண்டு அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் மூலம் தன்னை ஒரு நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் திரைப்படங்களில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட் செல்வமாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …