பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா வீட்டில் நேர்ந்த மரணம்.. ரசிகர்கள் சோகம்..

நடிகை சுஜிதா இப்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

சுஜிதா

முந்தானை முடிச்சு படத்தில், அந்த படத்தில் கதாநாயகன் பாக்யராஜின் கைக்குழந்தையாக இருக்கும் குழந்தை சுஜிதா தான். அதே போல் பூ விழி வாசலிலே படத்தில், சத்யராஜிடம் அடைக்கலம் தேடி வந்து கொலைகாரர்களான பாபு ஆண்டனி, ரகுவரனிடம் இருந்து தப்பிக்கும் குழந்தையாக நடித்ததும் சுஜிதா தான்,

சினிமாவில் சில படங்களில் கதாநாயகிகளின் தோழியாக நடித்தவர் சுஜிதா. டிவி சீரியல்களில்தான் அவர் மிக அதிகமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா கிரண்

அவரது அண்ணன் சூர்யா கிரண். இவரும் ஒரு பிரபலமான குழந்தை நட்சத்திரம்தான். படிக்காதவன், மனிதன் உள்ளிட்ட பல படங்களில் சின்ன வயது ரஜினியாக நடித்திருப்பார்.

இதையும் படியுங்கள்: பீரியட்ஸ் நேரத்தில் என் தோழி என்னிடம் இதை கேட்டால்.. ஆனால்.. அயலி Abi Nakshathra ஓப்பன் டாக்..

மவுன கீதங்கள் படத்தில் பாக்யராஜ் மகனாக நடித்திருப்பார். அதே போல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பல படங்களில் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு சிறுவயது ஹீரோவாக 200க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் சூர்யா கிரண்.

டைரக்ட் செய்வதில் ஆர்வம்

இவரது உண்மையான பெயர் சுப்பிரமணி ராதா சுரேஷ். சினிமாவில் நடிப்பதை விட டைரக்ட் செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சூர்யா கிரண், கவிதா முதல் கல்பனா வரை என்ற படத்தை இயக்கினார். நிஜாம் தேடு செஜாபாலி என்ற இவரது இயக்கத்தில் வெளிவந்த படம், பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இதையும் படியுங்கள்: அறிமுகமான முதலில் ஒரு நாளைக்கு 4 முறை இதை பண்ணனும்.. அனுபவம் பகிர்ந்த அனிதா சம்பத்..

தொடர்ந்து தானா 51, பிரம்மாஸ்திரம், ராஜூ பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கினார். பின் அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாததால், டைரக்ட் செய்வதை கைவிட்டார். 2 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

காவேரி

இவரது மனைவி தமிழில் பல படங்களில் நடித்த காவேரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமுத்திரம் படத்தில் சரத்குமார், முரளி ஆகியோரின் தங்கையாக நடித்திருப்பார். காசி படத்தில் விக்ரம் ஜோடியாகவும் கண் பார்வை தெரியாதவராக நடித்திருப்பார். சூர்யா கிரணும், காவேரியும் காதலித்து திருமணம் செய்த நிலையில், சில ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

மஞ்சள் காமாலை

இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சூர்யா கிரண், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார், அவருக்கு 49 வயதாகிறது. இந்நிலையில் இன்று உடல்நலம் மிக மோசமான நிலையில் அவர் உயிரிழந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா வீட்டில் நடந்த அவரது உடன் பிறந்த சகோதரர் சூர்யா கிரண் மரணம், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version