படுக்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..

குழந்தையாக கேமரா முன் நின்றவர்களுக்கு, வளர்ந்த பிறகு அந்த கேமரா முன் நடிப்பதற்கு கற்றுத் தர வேண்டியதில்லை. அதுபோல் சுஜிதா போன்ற நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக இருந்து, திரை நட்சத்திரமாக உயர்ந்தவர்கள்.

சுஜிதா

பேபி சுஜிதாவாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். முந்தானை முடிச்சு படத்தில், ஊருக்குள் வாத்தியாராக வரும் கே பாக்யராஜின் கைக்குழந்தையாக அந்த கொலு கொலு பொம்மையாக இருப்பது குழந்தை சுஜிதாதான்.

பூவிழி வாசலிலே

இந்த படத்தில் பாக்யராஜிடம் படிக்கும் மாணவர்களில் ஒருவராக நடித்திருப்பார் மாஸ்டர் சூர்யா கிரண். இந்த படம் உள்பட பல படங்களில் சிறுவனாக நடித்தவர் சூர்யா கிரண்.

இவர் படிக்காதவன் படத்தில் சின்ன வயது ரஜினியாக நடித்திருப்பார். சமீபத்தில்தான் இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு 49வது வயதில் உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்: கணவரை பிரிந்துவிட்டேன்.. ஆனால் அதுக்காக ஏங்குறேன்.. பிரியங்கா தேஷ்பாண்டே ஓப்பன் டாக்..!

ஆக அண்ணன் தங்கை இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவில் நடித்து அசத்தியவர்கள்தான். காதல் பரிசு, பூவிழி வாசலிலே உள்ளிட்ட பல படங்களில் பேபி சுஜிதா நடித்திருக்கிறார். வளர்ந்த பிறகும் சில படங்களில் இளம்பெண்ணாக நடித்திருக்கிறார்.

டிவி சீரியல்கள்தான்

ஆனால் சுஜிதாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்தது டிவி சீரியல்கள்தான். இதுவரை ஏகப்பட்ட டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார் சுஜிதா. சமீபத்தில் இவரது நடிப்பில், மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் தனம் என்ற கேரக்டரில் கொழுந்தன்களுக்கு அண்ணியாக நடித்து, தன் பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி, மைதிலி, விளக்கு வச்ச நேரத்தில, ஒரு கை ஓசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில்…

சமூக வலைதளங்களில் மிக ஆர்வமாக இருக்கும் நடிகை சுஜிதா, அடிக்கடி தனது புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள், வெளியூர்களுக்கு சென்றால் அங்கு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் என அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்:  நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு.. கிக் ஏற்றும் மாளவிகா மோகனன்..

பேபி நட்சத்திரமாக சினிமா பயணத்தை துவங்கி, இன்று வரை ரசிகர்கள் விரும்பும் ஒரு நல்ல நடிகையாக வலம் வரும் சுஜிதாவின் கணவர் பெயர் தனுஷ். இவரும் சினிமாத்துறையை சேர்ந்தவர்தான். இந்த தம்பதிக்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.

படுக்கையில்…

இந்நிலையில் தன் மகனுடன் ஒரு நட்சத்திர ரெஸ்டாரெண்ட் போன்ற ஒரு சொகுசு அறையில் தன் அன்பு மகனுடன் இருக்கும் புகைப்படங்களை சுஜிதா, அப்டேட் செய்திருக்கிறார்.

தனது மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, படுக்கையில் அமர்ந்திருக்கும் க்யூட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version