Site icon
Tamizhakam

50 வயசுல திருமணம்.. விரக்தியால் நடிகை சுகன்யாவுக்கு ஏற்பட்ட மன மாற்றம்..!

தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான பெருமை உண்டு. அது மிக முக்கிய நடிகைகள், சிறந்த நடிககைள் தமிழ் சினிமாவுக்கு இதுவரை கிடைத்திருக்கிறார். பல நல்ல படங்களில் அவர்கள் நடித்திருக்கின்றனர்.

அவர்கள் சினிமாவில் நடித்துவிட்டு, சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் அவர்களது புகழ் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது.

நடிகை சுகன்யா

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர், முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் கடந்த 1992 ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், புது நெல்லு புது நாத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து சின்னக் கவுண்டர், மகாநதி, இந்தியன், சின்ன மாப்ளை, வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் சுகன்யா நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

திருமண வாழ்க்கையில் முறிவு

கடந்த 2002 ஆம் ஆண்டில் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை சுகன்யா திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அடுத்த சில ஆண்டுகளில் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார்.

அதன் பிறகு ஆனந்தம் உள்ளிட்ட சில டிவி சீரியல்களில் சுகன்யா நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், தனது இரண்டாவது திருமணம் குறித்து எதுவும் யோசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவருக்கு வயது 50 ஆகி விட்டது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுகன்யா, உங்கள் திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தாராளமாக நீதிமன்றம் செய்து சென்று, விவாகரத்துக்கு மனுதாக்கல் செய்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். இதில் தயங்க வேண்டிய அவசியம் இல்லை.

50 வயதாகிறது

பிடிக்காத வாழ்க்கையை வாழ்வதை விட, விவாகரத்து பெற்றுக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதை செய்யாமல் குடும்ப வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி இருக்கிறார்.

எப்படி அழைக்கும்

அதுமட்டுமின்றி, எனக்கு 50 வயதாகிறது. எனக்கு இரண்டாவது திருமணம் குறித்து எந்தவிதமான எண்ணமும் இதுவரை இல்லை.அதுபற்றி நான் யோசிக்கவும் இல்லை என்று கூறியிருக்கும் சுகன்யா, இனி நான் திருமணம் செய்து கொண்டால், எனக்கு பிறக்கும் குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா, பாட்டி என்று அழைக்குமா என்று எனக்கே சந்தேகமாக உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

அரசியல் பிரமுகரின் கட்டுப்பாட்டில்…

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில், நடிகை சுகன்யா அரசியல் கட்சி பிரமுகரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்தார்.

அவரது கண்ட்ரோலில் பங்களாவில் அவருடன் வாழ்க்கை நடத்தி வந்தார். அவரது ஆசை நாயகியாக அவர் இருந்தால் தான், சினிமாவில் சுகன்யாவால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

விரக்தியால் மனமாற்றம்

இப்போது இரண்டாவது திருமணம் குறித்து சுகன்யா பேசியிருப்பதும், பயில்வான் ரங்கநாதன் சுகன்யா குறித்து பேசியிருப்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

50 வயசுல திருமணம்.. விரக்தியால் நடிகை சுகன்யாவுக்கு ஏற்பட்ட மன மாற்றம், தனக்கு குழந்தை பிறந்தால் அம்மா என்று அழைக்குமா, பாட்டி என்று அழைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Exit mobile version