இதனால் தான் சினிமாவில் இருந்து விலகிட்டேன்.. ரகசியம் உடைத்த நடிகை சுகன்யா..!

தமிழில் நடித்த சில நடிகைகள் திடீரென காணாமல் போய் விடுகின்றனர். ஆனால் அவர்களாக விலகிப் போனார்களா, அல்லது பட வாய்ப்புகளின்றி இன்றி வேறு வழியின்றி சினிமாவை விட்டு வெளியேறினார்களா என்று காலப்போக்கில்தான் தெரிய வருகிறது.

சுகன்யா

நடிகை சுகன்யா தமிழ் சினிமாவில் மிக அழகான, அம்சமான நடிகையாக வலம் வந்தவர். 1990களில் 10 படங்கள் வெளியானால், அதில் 3 படங்களில் சுகன்யா இருப்பார். அந்தளவுக்கு முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் நடித்த படங்கள் எல்லாமே பெரிய வெற்றிப் படங்களாக தான் இருந்தன.

கடந்த 1991ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து படம்தான் சுகன்யாவின் அறிமுக படம். அந்த முதல் படத்திலேயே அவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

அடுத்து கோட்டை வாசல், வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிசாமி, செந்தமிழ்பாட்டு, சின்ன மாப்ளே, மகாநதி, இந்தியன், தாலாட்டு, கேப்டன் என பல படங்களில் நடித்தார். இதில் சுகன்யா ஜோடியாக நடிக்காத ஒரே பெரிய நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான்.

முத்து படத்தில்…

ஆனால் அந்த வாய்ப்பு சுகன்யாவுக்கு வந்திருக்கிறது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய முத்து படத்தில் முதலில் நடிக்க இருந்தது சுகன்யா தான். ஆனால் அந்த நேரத்தில் சுகன்யாவை தொடர்பு கொள்ள முடியாததால், அந்த ரங்கநாயகி கேரக்டரில் மீனா நடித்தார்.

நடிகை சுகன்யாவை பொருத்த வரை மிகச்சிறந்த நடிகை. இந்தியன் தாத்தா படத்தில், தாத்தா கமல் நடிப்பு எவ்வளவு அற்புதமாக இருந்ததோ, அதே அற்புதமான நடிப்பை, பாட்டி கேரக்டரில் நடித்த சுகன்யாவும் வெளிப்படுத்தி இருப்பார். மேக்கப்பிலும் சுகன்யா அடையாளமே தெரியாது.

இதையும் படியுங்கள்: காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகரின் தற்போதைய பரிதாப நிலை

இந்தியன் படத்தில்…

இந்தியன் படத்தில் பிளாஸ்பேக் காட்சிகளிலும் சுகன்யா நடிப்பு, அழுத்தமானதாக இருக்கும்.

அதே போல் சுகன்யா நடிப்பில் வெளுத்து வாங்கிய மற்றொரு படம் சின்னக்கவுண்டர். ஆர்வி உதயக்குமார் இயக்கத்தில் விஜயகாந்த் ஜோடியாக, தெய்வானை கேரக்டரில் சுகன்யா வாழ்ந்திருப்பார்.

பரதநாட்டியக் கலைஞர்

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் சுகன்யா நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி பரதநாட்டிய கலைஞர் சுகன்யா என்பது பலரும் அறியாத விஷயம்.

இதையும் படியுங்கள்: திருமணமே செய்யாமல் வாழும் நடிகை நக்மா.. கட்டம் கட்டி சீரழித்த பிரபலங்களின் ரகசியம்..!

அமெரிக்காவில்…

சினிமாவில் மட்டுமின்றி ஆனந்தம் உள்ளிட்ட சில சீரியல்களிலும் சுகன்யா நடித்திருக்கிறார். சினிமாவில், சீரியலில் பிஸியாக இருந்த சுகன்யா, 2002ம் ஆண்டில் ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் ஓரே ஆண்டில் அவரை விட்டு பிரிந்து விட்டார். சுகன்யாவுக்கு ஒரு மகள் இருப்பதாக கூறப்படுகிறது.

யாரும் என்னை அழைக்கவில்லை

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை சுகன்யா பங்கேற்று பேசியிருக்கிறார். அப்போது சினிமாவை விட்டு விலகியது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மலையாளத்தில் நான் நடித்த கானாகீனா என்ற படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனா அதைப்பத்தி யாருமே பேசலை.

படங்களில் நான் நடிக்க தயாராக இருந்தேன். ஆனா யாரும் என்னை அழைக்கவில்லை என்பதுதான் உண்மை. நானாக சினிமாவில் இருந்து விலகவில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த நேர்காணல் வாயிலாக, யாரும் என்னை நடிக்க அழைக்காததால் தான் சினிமாவில் இருந்து விலகி விட்டேன் என்று ரகசியம் உடைத்திருக்கிறார் நடிகை சுகன்யா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version