இதனால் தான் இந்தியன் 2 படத்தில் நடிக்கல..! Shootingல Dressஐ கிழித்து.. நடிகை சுகன்யா ஓப்பன் டாக்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சுகன்யா தமிழில் முன்னணி ஹீரோக்களாக இருந்த நடிகர்களோடும் இணைந்து நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்.

இது மட்டுமல்லாமல் இவர் சின்ன கவுண்டர் படத்தில் மனோரமா ஆச்சியோடு இணைந்து பேசிய டயலாக்குகள் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

இதனால் தான் இந்தியன் 2 நடிக்கல..

நடிகை சுகன்யா பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் 1996-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த இந்தியன் திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்தியன் பகுதி 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் அதிலும் நடிகை சுகன்யா நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது இந்தியன் இரண்டு படம் திரையரங்குகளில் வெளி வந்துள்ள சூழ்நிலையில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது.

மேலும் படத்தில் வழக்கம் போல உலகநாயகன் கமலஹாசன் நடிகர் கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படம் சுமார் 130 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற யூகங்கள் வெளி வந்த நிலையில் இந்த படத்திற்கான பட்ஜெட் 250 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்களின் மத்தியில் கலவை வீதியான விமர்சனத்தை பெற்றிருக்கும் இந்த படத்தில் நடிகை சுகன்யா ஏன் நடிக்கவில்லை என்பதை அண்மை பேட்டியில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஷூட்டிங்ல டிரஸ்சை கிழித்து..

இந்தப் படத்தில் நடிகை சுகன்யா நடித்த போது ஒரு காட்சியில் வெள்ளையர்கள் அனைவரும் இந்திய பெண்களின் புடவையை உருவி விடக்கூடிய காட்சி ஒன்று பதிவு செய்ய வேண்டிய நிலையில் இதை எப்படி எடுப்பீர்கள் என்று கேட்டதற்கு இயக்குனர் ஷங்கர் நீங்கள் ஒரு மரத்தின் சைடில் மறைந்து இருந்தால் போதும் என்று கூறி இருந்தார்.

ஆனால் அவர் சொன்னதற்கு மாறாக அந்த காட்சி படம் பிடிக்கப்பட்டதோடு அந்த காட்சியை படம் பிடிக்கப்பட்ட சமயத்தில் நடிகை சுகன்யாவின் புடவை ஷூட்டிங்கில் கிழித்து படப்பிடிப்பு நடந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த கசப்பான அனுபவத்தை அடுத்து இந்த காட்சி வெளி வரக்கூடாது என்று சென்சார் போர்டுக்கு உடனடியாக தகவலை அளித்ததோடு மட்டுமல்லாமல் அன்று திரைப்பட சங்கத்தின் தலைவராக இருந்த ராதாரவி இடம் குறித்து பேசியத்தை அடுத்து படத்தில் அந்த காட்சி வெளி வராது என்று தெளிவாக சொல்லிவிட்டார்கள்.

நடிகை சுகன்யா ஓப்பன் டாக்..

இந்நிலையில் அந்த கசப்பான அனுபவம் இன்னும் தன்னை விட்டு நீங்கவில்லை என்று ஓபனாக பேசியிருக்கும் நடிகை சுகன்யா இதனால் தான் இந்தியன் படம் இரண்டில் அவர் நடிக்கவில்லை என்ற உண்மையை ஓப்பனாக சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து தற்போது இந்தியன் 2 படம் ஏற்கனவே சேனாதிபதி தாத்தாவின் வயது 103 கடந்துவிட்ட நிலையில் சுகன்யாவின் ரோல் தேவையில்லாத ஒன்று என்பதால் தான் சேர்க்கவில்லை என ஏற்கனவே ஷங்கர் கூறியிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

எனவே அதையும் இதையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தியன் 2 படத்தில் நடிகை சுகன்யா நடிக்காதக்கான காரணம் மேலும் அவர் கூறிய விபரங்கள் தற்போது இணையங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version