விஜயகாந்த் குறித்து உண்மையை உடைத்த சுகன்யா..!

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே சில நடிகைகள் பிஸியாக தொடர்ந்து பல படங்களில் நடிக்கின்றனர். சிலர் 3 ஆண்டுகள், சிலர் 5 ஆண்டுகள், சிலர் 10 ஆண்டுகள் வரை கூட நீடித்து நிற்கின்றனர். இன்னும் சில நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போய் விடுகின்றனர்.

பாரதிராஜா அறிமுகப்படுத்திய சுகன்யா

ஆனால் தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பல ஹிட் படங்களில் நடித்தவர் சுகன்யா. பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புது நாத்து படம் மூலம் அறிமுகமான சுகன்யா தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து, முக்கிய நடிகையாக மாறினார்.

இந்தியன், மகாநதி, சின்னக்கவுண்டர், சோலையம்மா, உடன்பிறப்பு, சேனாதிபதி, செந்தமிழ்பாட்டு, வண்டிசோலை சின்ராசு, தாலாட்டு, திருமதி பழனிசாமி, வால்டர் வெற்றிவேல் என பல படங்களில் நடித்தவர் சுகன்யா.

ஆனந்தம் சீரியலில்…

சினிமாவில் மட்டுமின்றி ஆனந்தம் என்ற சீரியலில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சுகன்யா நல்ல பரதநாட்டிய கலைஞர். நன்றாக பாடவும் செய்வார்.

இதையும் படியுங்கள்: அம்மாடியோவ்.. எத்த தண்டி.. நீச்சல் உடையில் குளுகுளு போஸ் கொடுத்துள்ள எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!

சின்னக்கவுண்டர் படத்தில்…

நடிகை சுகன்யா சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகர் விஜயகாந்த் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். விஜயகாந்த் உடன் சின்னக்கவுண்டர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் சுகன்யா. அந்த நேர்காணலில் நடிகை சுகன்யா கூறியதாவது,

சின்னக்கவுண்டர் படத்தில் நடித்த போது விஜயகாந்திடம், டைரக்டர் உதயகுமார் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் அப்போது அவரிடம் அதிகமாக பேசவில்லை.

ஹாய் சொன்ன விஜயகாந்த்

அப்புறம் அவர் பக்கத்தில் இருந்த சேரை எடுக்கப் போனேன். அப்போ அவர் என்னை பார்த்து ஹாய்ன்னு சொன்னார். அப்போ எனக்கு பயமா இருந்துச்சு. நான் சேரை எடுத்துக்கறேன்னு சொன்னேன். சேர்தானே வேணும்? எடுத்துட்டு போங்க அப்படீன்னு சொன்னார்.

இதையும் படியுங்கள்: நோ ப்ரா.. ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.. ரசிகர்கள் ஷாக்..

பம்பரம் விட நல்லா கத்துக்கிட்டேன்

அப்புறம் இந்த படத்துல வர்ற பம்பரம் விடற சீனுக்காக இயக்குனர் என்னை பம்பரம் விட கத்துக்க சொன்னாரு. அதுக்கு அப்புறம் படப்பிடிப்பு முடிஞ்சு வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் எனக்கு இதே வேலைதான் இருந்துச்சு. அதனால நான் பம்பரம் விட நல்லா கத்துக்கிட்டேன்.

இப்பவும் சின்னக்கவுண்டர் படத்துல அந்த காட்சியை எல்லோரும் விரும்பி பார்க்கறாங்க. அந்த சீன்ல ஆபாசமே இல்லாம இயக்குனர் அதை ரொம்ப சரியா எடுத்திருந்தார் என அந்த படத்தில் விஜயகாந்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இப்படி சின்னக்கவுண்டர் படத்தில் நடித்த வகையில், அவரை பற்றிய உண்மைகளை சொல்லி இருக்கிறார் நடிகை சுகன்யா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version