திறந்த அறையில் சுகன்யா செய்த அந்த காரியம்.. வெளிப்படையாக பேசிய தயாரிப்பாளர்..!

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை சுகன்யா 1969-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி பிறந்தவர்.

இவரது இயற்பெயர் ஆர்த்தி தேவி என்பதாகும். சினிமாவில் நடிப்பதற்காக இவரது பெயரை சுகன்யா என்று இயக்குனர் பாரதிராஜா பெயர் மாற்றம் செய்து வைத்தார். இதனை அடுத்த தான் இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை சுகன்யா..

அந்த வகையில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சுகன்யா 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பணிபுரிந்து இருக்கிறார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியதை அடுத்து அந்த நிகழ்ச்சியை சன் டிவியில் பெப்சி உமா தொகுத்து வழங்கினார் என்பது பலருக்கும் தெரியாது.

திரைப்படங்களில்  நடித்ததோடு இல்லாமல் இவர் அழகு மற்றும் திருப்பதி திருகுடை திருவிழா எனும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளி வந்த செந்தமிழ் பாட்டு, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, உறுதிமொழி, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன்பிறப்பு, மகாநதி, கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் இன்று வரை இவரது நடிப்பினை சொல்லக் கூடிய வகையில் இருக்கும்.

சுகன்யா செய்த அந்த காரியம்..

இந்நிலையில் சின்ன மாப்ளே திரைப்படத்தில் நடித்த போது தயாரிப்பாளருக்கு சுகன்யா செய்த விஷயத்தை மிகவும் பெருமையாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

அப்படி அவர் என்ன செய்தார் என்பது உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? பொதுவாகவே நடிகைகள் சுகவாசிகளாக இருப்பார்கள். மேலும் ஆடம்பரமாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் இயல்பான சில விஷயங்களில் நேந்து கலந்து செல்ல மாட்டார்கள் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும்.

அந்த வகையில் சின்ன மாப்ளே படப்பிடிப்பானது கோபிசெட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற சமயத்தில் அங்கு தங்குவதற்காக ஏற்கனவே ஹோட்டலில் ரூமினை புக் செய்து இருந்தார்கள்.

எனினும் இரண்டு படப்பிடிப்புகள் அந்த சமயத்தில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நடந்ததை அடுத்து இவர்கள் புக் செய்த ஹோட்டலில் ரூம் கிடைக்காததை அடுத்து வேறு ஹோட்டலில் ரூம் தேடி இருக்கிறார்கள்.

வெளிப்படையாக பேசிய தயாரிப்பாளர்..

பொதுவாகவே கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஆறு ரூம்கள் மட்டுமே ஏசி செய்யப்பட்ட நிலையில் இருந்ததாகவும் இதனை அடுத்து சாதாரண ரூம் கூட அவர்களுக்கு அந்த சமயத்தில் கிடைக்கவில்லை.

அப்போது தான் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் இருந்த ஹோட்டலில் தான் இவர்களுக்கு ரூம் கிடைத்திருக்கிறது. அந்த ரூமில் இருந்த ஜன்னல்களுக்கு கதவுகள் கூட போடப்படாத நிலையில் இருந்தது.

இதனை அடுத்து வேறு வழி இல்லாமல் நடிகை சுகன்யாவின் அம்மா மற்றும் அப்பாவிடம் இந்த ரூம் தான் கிடைத்து இருக்கிறது. என்ன செய்யலாம் என்று கேட்க அவர்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் என்று சொன்னார்கள்.

மேலும் அந்த ஜன்னல்களுக்கு அவர்கள் கொண்டு வந்த வேட்டி சேலையை திரைகளாக மாற்றி விரித்து அந்த ரூமில் இருந்த படி தான் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார்கள்.

இது போன்ற மனநிலை இன்று இருக்கும் எந்த ஒரு துணை நடிகை கூட ஏற்படாது. அந்த அளவிற்கு பக்குவத்தோடு நடந்து அந்த படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து தயாரிப்பாளரை சிக்கலில் தள்ளாமல் இருந்த அற்புத பெண் தான் சுகன்யா என்று பெருமையாக பேசி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version