பிரபல நடிகருடன் தொடர்பு.. என்னை அடிச்சு அந்த இடத்துல நிக்க வச்சி.. ஓப்பனாக கூறிய நடிகை சுலக்‌ஷனா..!

Actress Sulakshana : தமிழில் தூறல் நின்னு போச்சு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுலக்‌ஷனா.

தற்போது சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அம்மா பாட்டி உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் பாக்யராஜுடன் நான் தொடர்பில் இருப்பதாக காதல் கிசுகிசுக்கள் வந்தன என்று அது பற்றிய விளக்கத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதன் பிறகு படிப்பு கல்லூரி என நகர்ந்து சென்ற இவருக்கு தூரல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தில் கதாநாயகி ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் திரைப்படமே பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுக்கவே அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்தார். புகழின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாக்காத வகையில் நடிகர் பிரசாந்துக்கு அம்மாவாக நடித்த அதிர்ச்சியை கிளப்பினார்.

சுலக்‌ஷனாவுக்கும் பிரசாந்திற்கும் ஒரே ஒரு வயது தான் வித்தியாசம். நடிகர் பிரசாந்தை விட ஒரு வயது அதிகமானவர் நடிகை சுலக்‌ஷனா. வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு அம்மாவாக நடித்த பரபரப்பை கிளப்பினார்.

இந்த திரைப்படம் தான் பிரசாந்தின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இசையமைப்பாளரான எம்எஸ் விஸ்வநாதனின் மகனை திருமணம் செய்து கொண்டார் நடிகை சுலக்சனா.

சில திரைப்படங்களில் இயக்கியிருந்த எம்எஸ் விஸ்வநாதன் மகனுடன் மோதலில் ஆரம்பித்த இவருடைய பழக்கம் இறுதியில் காதலில் முடிந்தது. இவர்களுடையகாதல் திருமணத்திற்கு பிறகு மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

அதற்கு பிறகு தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக மிகவும் சிரமப்பட்ட இவர் நடித்தே ஆக வேண்டும் என்று சினிமா பக்கம் வந்தார். அப்போது பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் கவனம் செலுத்தி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அவர் தூரல் நின்னு போச்சு படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது தூறல் நின்னுபோச்சு ஆடிஷனில் கலந்து கொள்ளும்போது எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனாலும் என்னதான் நடக்கிறது என்பதை பார்த்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது பாக்யராஜ் என்னிடம் உங்களுக்கு சிரிக்க தெரியுமா..? என்று கேட்டார். நான் சிரித்துக் கட்டினேன். நான் சிரித்தது அவருக்கு பிடித்து போய்விட்டது.

நாளைக்கு பொள்ளாச்சியில் சூட்டிங் இருக்கு.. ரெடியாகிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினார். ஆனால் முதல் நாள் சூட்டிங் முடிந்ததும் நீங்கள் சரியாக சரியாக பண்ணலன்னு சொன்னா ஆளை மாற்றி விடுவேன். உங்களை அப்படியே பஸ் ஏற்றி வைத்து விடுவேன் என்று மிரட்டினார்.

ஆனால், பொள்ளாச்சிக்கு சென்ற பிறகு எனக்கு பெரிய அளவில் பயம் ஒன்றும் இல்லை. அதனால் தான் நன்றாக நடித்து விட்டேன் அதற்கு பிறகு சில நேரங்களில் எனக்கு இயக்குனர் பாக்யராஜ் உடன் சண்டை வரும்.

அப்போதெல்லாம் நான் நாளைக்கு சென்னைக்கு போயிடுவேன் பாத்துக்கங்க என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். ஆனால் பாக்யராஜ் இதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்.

சில இடங்களில் எனக்கு அழுகை வரவில்லை என்பதற்காக என்னை பளார் என்ன அடித்திருக்கிறார். அப்போது நான் அழுது கொண்டிருப்பேன் அப்படியே அதை படம் பிடித்து படத்தில் வைத்து விடுவார்.

அதுபோல அந்த படத்தில் ஒரு காட்சியில் நான் கொள்ளிக்கட்டையின் மீது ஏறி நின்று தப்பு பண்ணல.. நான் கெட்டுப் போகல.. என்று டயலாக் பேச வேண்டும். மற்ற படங்களாக இருந்தால் டூப்ளிகேட் கொள்ளிக்கட்டையை வைத்து இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் ஒரு கொள்ளிக்கட்டை மீது என்னை ஏறி ஏற்க வைத்து விட்டதால் சூட்டு கொப்பளம் வந்துவிட்டது.

மேலும், அந்த படத்தில் பாக்யராஜிற்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாகவும் நான் அவரை காதலிப்பதாகவும் கூட கிசுகிசுக்கள் கிளம்பியது. அதில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது.

அந்த நேரத்தில் காதல் கத்திரிக்காய் என எதுவும் எனக்கு வந்தது கிடையாது. அது பற்றி நான் யோசித்து கூட கிடையாது. அவரும் அந்த நினைப்பில் என்னுடன் பழகவில்லை. எதற்காக இப்படி ஒரு பொய்யான செய்தியை பரப்பினார்கள் என்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை என வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை சுலக்‌ஷனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version