“இந்த நடிகர் இருந்த இடத்தை பினாயில் ஊத்தி கழுவனும்..” போட்டு தாக்கிய சுமித்ரா..!

மலையாளத் திரை உலகில் வெளிவந்த நிர்மால்யம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை சுமித்ரா ஆவார். இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் அவரும் பெண் தானே என்ற படத்தில் 1974-ஆம் ஆண்டு நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

நடிகை சுமித்ரா..

நடிகை சுமித்ரா அதே ஆண்டு ஒரு குடும்பத்தின் கதை, அவள் ஒரு காவியம் போன்ற படங்களில் நடித்த இவர் புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் 1977-ஆம் ஆண்டு நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீசை பெற்றார்.

இதனை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் அவள் ஒரு சீதை, சொன்னது நீதானா, கடவுள் அமைத்த மேடை, திருப்புங்கள், துணைவி, சங்கிலி, இரட்டை மனிதன், தேன்கூடு, கன்னி ராசி, வீரபாண்டியன், ஜோடி போன்ற படங்களில் நடித்த இவர் 2008-ஆம் ஆண்டு இந்திர லோகத்தில் நா அழகப்பன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

ஹீரோயினிகளாக பல படங்களில் நடித்து முடித்த இவர் அம்மாவாகவும் மாமியாராகவும் சில படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அப்படித்தான் அவர் ரஜினி கமல் போன்ற நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த பின் அம்மாவாக நடித்திருக்கிறார்.

அந்த நடிகர் இருந்த இடத்த..

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிங்காரவேலன் படத்தில் நடந்த ஒரு நிகழ்வினை குறித்து பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் சிங்காரவேலன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பேன். அந்த படத்தில் ஒரு காட்சியில் அம்மா, அம்மா என்று ஓடி வர வேண்டும்.

.ஆனால் கமலஹாசனும் ஏறுக்கு மாறாக சுமி, சுமி என்று ஓடி வருவார். இதற்கு நான் அடி வாங்குவ இப்ப நான் உனக்கு அம்மா. அம்மா என்று கூப்பிடு என்று சொல்லுவேன். கமல் அதற்கு கோபப்பட்டு எனக்கு காதலியா நடிச்ச பொண்ண இப்ப அம்மான்னு எப்படி கூப்பிடுவேன். ஏன் இப்படி பண்ணறீங்க என்று இயக்குனரிடம் கோபப்படுவார்.

பினாயில் ஊத்தி கழுவனும்..

பொதுவாகவே கமலஹாசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமாக பேசக்கூடியவர் அது மட்டுமல்லாமல் இரட்டை அர்த்த வார்த்தைகள் தான் அதிகம் பயன்படுத்துவார். அவர் இருக்கின்ற இடத்தை கண்டிப்பாக பினாயில் ஊற்றி தான் கழுவி விட வேண்டும் அந்த அளவுக்கு பேசி விடுவார்.

ஆனால் அவர் அப்படி பேசும் போது ஜாலியாக தான் இருக்கும் எங்களுக்கு ஜோடியாக நடிச்சிட்டு இப்ப 11 வயசு ஹீரோயின்களோட ரஜினி, கமல் நடிக்கும் போது பாத்தீங்களா நம்ம கூட நடிச்சிக்கிட்டு 16 வயசு பொண்ணோட டான்ஸ் ஆடுறாங்க என்று கிண்டல் பண்ணுவோம் எனக் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து நடிகை சுமித்ரா பேசிய பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் கமலஹாசன் இருந்த இடத்தை பினையில் ஊற்றி கழுவ வேண்டும் என்று சொன்னதை பற்றி ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் சுமித்ரா இப்படியா? கமலஹாசனை பேசினார் என்று ஆச்சரியத்தோடு அனைவரும் ஆண்ட விஷயத்தை பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version