நல்லா தான் வாழ்ந்தோம்.. என் புருஷன் சொன்ன அந்த வார்த்தை!! – ஓப்பான உடைத்த நடிகை சுமித்ரா..

மலையாளத் திரைப்படமான நிர்மாலாயம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை சுமித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொருத்த வரை அவளும் பெண் தானே என்ற திரைப்படத்தில் 1974 -ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகை சுமித்ரா..

நடிகை சுமித்ரா சிவாஜி கணேசன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற முக்கிய தமிழ் நடிகர்களோடு இணைந்து நடித்த ஹீரோயினி 90-களில் புகழ்பெற்ற அம்மா வேட நடிகையாக விளங்கியவர். இவர் அண்மை பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவர் நடிப்பில் வெளி வந்த அவள் ஒரு காவியம், புவனா ஒரு கேள்விக்குறி, கண்ணாமூர்த்தி, செல்லக்கிளி, ஓர் இரவு, துணைவி, தேன்கூடு, கன்னி ராசி, பணக்காரன், இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்கள் மீண்டும் ரசிகர்களின் மத்தியில் பேசப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

நல்லாத்தான் வாழ்ந்தோம்..

மேலும் அண்மை பேட்டியில் பேசிய நடிகை சுமித்ரா திருமணம் செய்து கொண்ட பிறகு இவர்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாக சென்று கொண்டு இருந்ததாக மிகவும் சந்தோஷத்தோடு கூறி இருக்கிறார்.

அத்தோடு தான் நினைத்த படி வாழ்க்கையில் எல்லாம் நடந்ததாக சொல்லி இருக்கும் அவர் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தினார். அது என்ன விஷயம் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் படித்த தெரிந்து கொள்ளலாம்.

என் புருஷன் சொன்ன அந்த வார்த்தை..

இந்நிலையில் திருமணம் ஆன புதிதில் தன் கணவன் சொன்ன அந்த வார்த்தையை பற்றி ஓப்பனாக சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கலாமா? என்று கேட்ட கேள்விக்கு உன்னை வீட்டில் வைத்திருந்தால் பலரும் என்னை பேசுவார்கள். எனவே உன்னை போன்ற ஒரு நடிகையை வீட்டில் வைத்திருப்பதை விட நடிக்க சொல்வது தான் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.

 

இன்று வரை என் புருஷன் சொன்ன அந்த வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை. அதை அடுத்து அவர் கொடுத்த ஆதரவின் மூலம் தான் நான் இந்த அளவு படங்களில் நடித்து பெயரினை பெற்று இருக்கிறேன் என்றார்.

ஓபனாக பேசிய சுசித்ரா..

இந்த விஷயத்தை ஓபன் ஆக தெரிவித்து அவர்கள் இருவர் இடையே உள்ள புரிதலை மிக சிறப்பான முறையில் விளக்கியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் இன்றைய சூழ்நிலையில் சினிமாவில் விவாகரத்துக்கள் அதுவும் நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் அதிகரித்து வரக்கூடிய நிலையில் இவர்களின் புரிதல் கட்டாயம் அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று சொல்லலாம்.

இந்நிலையில் இந்த விஷயமானது. தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version