கோடை காலம்..! – பெண்கள் இந்த விஷயங்கள் மிஸ் பண்ணவே கூடாது..!

 கோடை காலம் வந்த உடனேயே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த சூழ்நிலைகள் உங்கள் சருமத்தை பராமரிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உங்களுக்கு இருக்கும்.

எப்படிப்பட்ட சிரமமாக இருந்தாலும் சரும பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கைதான். அதிலும் வியர்வையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நாம் வாயால் சொல்ல முடியாது.

 அந்த அளவு குழந்தைகளையும் பெரியவர்களையும் பாதிக்கூடிய வேர்க்குரு மட்டுமல்லாமல் அம்மை நோயும் அதிக அளவு பெருகும்.

 எனவே சரும ஆரோக்கியத்தை பராமரிக்க பெண்கள் கட்டாயம் சில குறிப்புகளை கடைப்பிடித்து ஆக வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் வெயிலிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் சரும அழகை இழக்காமல் இருக்க முடியும்.

கோடையில் பெண்கள் ஃபாலோ செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்

👍வெயில் காரணமாக உடலில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து குறைந்து விடுவதால் எண்ணற்ற பிரச்சனைகள் சருமத்துக்கு ஏற்படும். இதை தவிர்க்க நீங்க அதிக அளவு நீர் சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

👍அதுமட்டுமல்லாமல் உங்கள் உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள காலை, மாலை என்று இரு வேளையும் குளிப்பது மிகவும் நல்லது. மேலும் உங்கள் முகத்திற்கு ஈரப்பதம் அவசியம் தேவை என்பதால் அடிக்கடி முகத்தை மீறால் கழுவி விடுங்கள் .

👍அத்தோடு பாடி லோஷனை பயன்படுத்தி வந்தால் அதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஈரப்பசை இழப்பிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க முடியும்.

👍 வெயிலின் தாக்குதலில் இருந்து உங்களை பாதுகாக்க சன் ஸ்கிரீன் ரோஷனை பயன்படுத்தலாம். அதில் எஸ் பி எப் 20 இலிருந்து 50க்குள் இருக்கக்கூடிய சன் ஸ்கிரீன் லோசனை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

👍 அந்த அளவு இருக்கக்கூடிய சன் ஸ்கிரீன் லோசரை நீங்கள் வெயிலில் வெளியே செல்லும்போது போட்டு செல்வதின் மூலம் புற ஊதா கதிர்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

👍 சாதாரண சோப்புகளை தவிர்த்து விட்டு ஆர்கானிக் சோப்புகளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

👍 பாலிஸ்டர் ஆடைகள் உடுத்துவதை தவிர்த்து காட்டன் ஆடைகள் உடுப்பதை அதிகரிக்கவும். உணவு விஷயங்களை பொருத்தவரை திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

👍மேலும் பழங்கள் நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். காரம் மற்றும் மசாலா கலந்த உணவுகளை கோடையில் சாப்பிடுவது நல்லது.

👍 வைட்டமின் சி அதிகமாக இருக்கக்கூடிய எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு போன்றவற்றை உணவில் சேர்ப்பதோடு அவற்றைக் கொண்டு நீங்கள் உங்கள் முக அழகை மேம்படுத்தி கூடிய பேஸ் பேக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …