கொளுத்தும் கோடை வெப்பத்தை சமாளிக்கும் வழிகள்.

காலநிலை மாற்றத்தால் எண்ணற்ற மாறுபட்ட சூழ்நிலையை சந்தித்த வரக்கூடிய எந்த புவியானது புவிவெப்பமடைதல் காரணத்தால் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் அடிப்படையில் இந்த கோடைகாலம் மிகுந்த வெப்பம் மிகுந்த காலமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படிப்பட்ட வெயில் நிறைந்த கோடைக் காலத்தில் கொளுத்தும் வெயிலிலை எப்படி சமாளிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

கோடை வெப்பத்தை சமாளிக்க வழிகள்:

கொழுந்து விட்டு எரியும் கோடை வெப்பத்தை சரிக்கட்ட நமது உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்து கொண்டாலே போதுமானது.

கோடையில் பொதுவாக நீங்கள் அதிக அளவு மசாலா நிறைந்த பொருட்களையும் உணவுகளையும் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்.

திடமான உணவாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக நீர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக கூழ் போன்ற நீர்மப் தன்மை கொண்ட கம்மங்கூழ்,ராகி கூழ் போன்ற பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்வதால் மூலம் தாகம் ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும் உடல் அதிக உஷ்ணம் அடையாமல் குளிர்ச்சியை கொடுக்கும்.

பழங்களைவிட அதிக அளவு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழைய சாதத்தின் தண்ணியை நீங்கள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்துவிட்டால் போதும் உங்களை வெயில் எந்தவிதத்திலும் பாதிக்காது. இந்த பழைய சாதத்தைக் தண்ணியோடு சிறிய வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தால் கூடுதல் பலனை கொடுக்கும்.

நீர்ச்சத்து மிகுந்த பழங்களான தர்பூசணி, வெள்ளரி, கிர்னி பழம் போன்றவற்றை தினமும் உண்பதால் நீர் சத்து குறையாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பனங்கற்கண்டு, இளநீர், நுங்கு, பதநீர், கற்றாளை சோறு போன்றவற்றை எடுத்துக் கொள்வதின் மூலம்  உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.

வாரத்தில் இரண்டு நாட்கள் குளிர்ந்த தலைக்கு நீர் விட்டு குளித்தல்,தினமும் இரண்டுவேளை குளியல் அதிலும் குறிப்பாக நல்லெண்ணெய்  தலையில் வைத்து குளிப்பது உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேற்கூறிய பொருட்களை இந்த வெயில் காலங்களில் பயன்படுத்தும் போது எவ்வித  பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும். முடிந்த வரை  குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்த்து இயற்கை பானங்களை பயன்படுத்தினால் எவ்வித பக்கவிளைவும் உடலுக்கு ஏற்படாது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …