தன்னை விட 31 வயது அதிகாமான நடிகருடன் ஆனந்தமான நடிகை காதலில் இருப்பதும்.. கட்டுனா.. அவரை தான் கட்டுவேன் என்றும் கூறி வருவது கோடம்பாக்க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்து வந்தவர் அந்த வெளிச்சமான நடிகர். தல நடிகர், தளபதி நடிகர் என பலருக்கு திருப்புமுனையை கொடுத்தவர். தற்போது இவருக்கு 54 வயதாகிறது.
ஆனால் கொடுமை பாருங்கள் இதுவரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருடைய குடும்பத்தில் பல முறை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி என் கூட இவருக்கு திருமணத்தின் மீதான ஆர்வம் இல்லை என்று கூறுகிறார்கள்.
காரணம் என்னவென்று அவரிடம் கேட்டால்.. அவர் கூறியது இது தான்.. சினிமாவை தான் நான் என் மனைவியாக பார்க்கிறேன் என்று வெள்ளந்தியாக பதில் கூறுகிறார்.
இந்நிலையில், தன்னுடைய 18 வயதிலிருந்து கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் அந்த ஆனந்தமான நடிகை வெளிச்சமான இயக்குனர் நடிகருடன் காதல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
குழந்தைகள் விளையாடும் பொருள் திரைப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அந்த படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு தற்போது காதலாக மாறி இருப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் வட்டமடித்து வருகிறது.
மேலும் பல்வேறு காதல் தோல்விகளை சந்திக்கும் இந்த ஆனந்தமான நடிகை தன்னை விட கிட்டத்தட்ட 31 வயது நடிகருடன் தற்போது காரில் இருப்பது எத்தனை நாளைக்கு என்று நமட்டு சிரிப்பு சிரிக்கும் கோடம்பாக்க வாசிகளையும் பார்க்க முடிகிறது.
மறுபக்கம் அந்த வெளிச்சமான இயக்குனருக்கு இதுதான் வேலை. வருடத்திற்கு ஒரு நடிகையுடன் ஊர் சுற்றி வருவார். அந்த வகையில் இந்த வருடம் இந்த ஆனந்தமான நடிகை என்று எளிதாக கடந்து செல்லும் நபர்களையும் பார்க்க முடிகிறது.
ஏற்கனவே செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியமான நடிகையை வெளிச்சமான இயக்குனர் காதலித்து வந்தார் என்று கூறப்பட்டது அதிலிருந்து தப்பிக்க தன்னுடைய உண்மையான காதலர் இவர்தான் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், தற்போது ஆனந்தமான நடிகருடன் காதலில் இருக்கிறார் என்று தகவல்கள் கிசுகிசுத்த வருகின்றன. இது எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.. காலா காலத்தில் கல்யாணம் பண்ணவில்லை என்றால் இப்படியான ரொம்ப பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்று வெளிச்சமான இயக்குனருக்கு அவருடைய நண்பர்கள் அறிவுரை கொடுத்து வருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால், ஆனந்தமான நடிகை இவரை திருமணம் செய்தே தீருவேன் என்று சத்தியம் செய்து வருகிறாராம். ஏற்கனவே ஒரு பேட்டியில் என்னை விட வயதில் அதிகமான நபரை தான் திருமணம் செய்வேன்.. அனுபவம் மிகுந்த ஒருவருடன் அனுபவமில்லாத ஒருவளாக சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.. என்று ஆனந்தமான நடிகை கூறியிருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. என்ன நடக்கப்போகிறது..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.