“நான் ரொமான்ஸ் சீன்ல நடிக்குறத பாத்துட்டு என் மகள்கள் கூறியது இது தான்..” ரகசியம் உடைத்த சுந்தர் சி..

இன்று இருக்கக்கூடிய திரை உலகில் இயக்குனர்களாக பல பணி புரிந்திருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் இயக்குனராக சுந்தர் சி விளங்குகிறார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர் இது வரை தமிழில் 24 மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனராக இருப்பதோடு மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்து தன் அசாத்திய நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இயக்குனர் சுந்தர் சி..

அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி ஆரம்ப காலங்களில் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து முறைமாமன் என்ற திரைப்படத்தை இயக்கியதை அடுத்து காமெடி படங்களை தருவதில் மிகச் சிறப்பான இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.

மேலும் இவரது இயக்கத்தில் வெளி வந்த உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம், அருணாச்சலம், மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்றவை மிகச்சிறந்த காமெடிகளை கொண்டிருந்த படம் என்பதால் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமான படமாக போற்றப்பட்டது.

இதனை அடுத்து இவர் தலைநகரம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தார். இந்த படத்தில் இவர் நடிக்கும் போது அவரது மகள்கள் ரொமான்ஸ் சீனில் நடிக்கிறதை பார்த்துகிட்டு என்ன சொன்னார்கள் என்ற ரகசியத்தை தற்போது போட்டு உடைத்திருக்கிறார்.

ரொமான்ஸ் சீன்ல நடிக்கிறத பார்த்தா..

பெண் பிள்ளைகள் என்றாலே அப்பாவின் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பார்கள். அந்த வகையில் சுந்தர் சி யின் இரண்டு பெண் குழந்தைகளுமே அவர் அப்பா மீது அதீத பாசத்தோடு இருக்கிறார்கள்.

இந்த குழந்தைகளுக்கு மிகச் சிறந்த அப்பாவாக இருக்கும் சுந்தர் சி தலைநகரம் படத்தில் நடிக்கும் போது ரொமான்ஸ் காட்சிகளில் ஹீரோயினியை தொட்டு நடிக்க வேண்டிய செயல்களில் நடித்ததை பார்த்து என்ன அப்பா இப்படி ஒய்? ஒய்? என்று கேள்விகளை கேட்டதோடு கண்களை இறுக்க மூடிக்கொண்டார்கள். அந்த அளவு மிகவும் பொசசிவாக என் மீது பற்று கொண்டவர்கள்.

இந்த நிலை தான் வளர்ந்த பின்பும் உள்ளது தன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மேலும் இது போன்ற காட்சிகளில் நடிப்பது அவர்களுக்கு அவ்வளவு மன நிறைவை தராத வகையில் தான் இருந்தது என்பதையும் கூறி இருக்கிறார்.

மகளின் ரியாக்சன்..

அதிலும் மூத்த மகளுக்கு ஐந்து வயது மற்றும் இளைய மகளுக்கு மூன்று வயது இருக்கும் போதே நான் ரொமான்ஸ் நடிக்கிறதை பார்த்துகிட்டு நோ.. நோ.. Dad ஒய்? ஒய்? என்று அவர்கள் எக்ஸ்பிரஸ் செய்த விதத்தை என்னால் இன்று வரை மறக்க முடியாது.

எனவே இவர்கள் தற்போது வளர்ந்து விட்டாலும் ஒரு அப்பாவாக என்னை பாசத்தோடு பார்ப்பதால் இது போன்ற காட்சிகளில் நடிப்பதை அவர்கள் விரும்புவதில்லை.

சுந்தர் சி தற்போது இந்த ரகசியத்தை கூறியதை அடுத்து ரசிகர்கள் பலரும் பரபரப்பாக இந்த விஷயத்தை இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள். மேலும் பலரும் இந்த விஷயத்தைப் பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version