கலகலப்பு 3யில் இவரு ஹீரோவா..? காமெடி பண்ணாதிங்க.. மறுத்த சுந்தர் சி..!

உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சுந்தர் சி.

தொடர்ந்து முறைமாமன், மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாசலம், அரண்மனை, வின்னர், இரண்டு, லண்டன், உன்னைத்தேடி, அழகான நாட்கள், கண்ணன் வருவான், கிரி போன்ற பல படங்களை இயக்கினார்.

இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படம், முற்றிலும் அவரது இயக்கத்தில் மாறுபட்ட படமாக இருந்தது.

சுந்தர் சி

வழக்கமாக காமெடி, காதல் படங்களை இயக்கும் சுந்தர் சி, இதில் வித்யாசமான ஒரு இயக்குநராக தன்னை வெளிப்படுத்தினார்.

ஆனால் படம் சரியாக ஓடவில்லை. ஆனால் இப்போது அன்பே சிவம் படத்தை பலரும் ரசித்து பார்க்கின்றனர்.

நடிக்கவும் செய்தார்

அதுமட்டுமின்றி பல படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கவும் செய்தார். தலைநகரம், வீராப்பு ஆயுதம் செய்வோம், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், முரட்டுக்காளை, சண்ட, அரண்மனை போன்ற படங்களில் நடித்தார்.

இதில் தலைநகரம், வீராப்பு, முரட்டுக்காளை, அரண்மனை போன்ற படங்கள் வெற்றி பெற்றன.

பேய்க்கதை படங்கள்

சுந்தர் சி படங்களை பொருத்தவரை அதில் காமெடி பிரதானமாக இருக்கும். காதல் படத்தின் மையக்கருவாக இருக்கும்.

அல்லது அரண்மனை போன்ற படங்களில் பேய்க்கதை மையக்கருவாக இருக்கும். அவரது பேய்க்கதை படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கலகலப்பாக, ஜாலியான படங்கள் அதுவும் பண்டிகை கால படங்களாக சுந்தர் சி படங்களை குறிப்பிடுவர். ஏனெனில் அவரது படங்களில் நட்சத்திர கூட்டம் அதிகமாக காணப்படும்.

கார்த்திக், ரம்பா தான்

சுந்தர் சி ஆரம்ப கால படங்களில் அதிகமாக நடித்தவர் நவரச நாயகன் கார்த்திக், ரம்பா தான்.

இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் கலகலப்பு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படத்தில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி, சந்தானம், இளவரசு, விஎஸ் ராகவன், சுப்பு பஞ்சு அருணாசலம், கருணாகரன், ஜான் விஜய், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கலகலப்பு 2

இதையடுத்து கலகலப்பு 2 படம், கடந்த 2018ம் ஆண்டில் வெளியானது. ஜெய், ஜீவா, சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்யாணி, சிங்கம்புலி, யோகி பாபு, ராதாரவி, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படமும் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தை தொடர்ந்து, கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி இயக்க இருப்பதாகவும், இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் கவின் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

கவின்

இதுகுறித்து சுந்தர் சி பிஆர்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், கலகலப்பு 3 படத்தில் கவின் நடிப்பதாக பரவும் தகவல் தவறானது.

ஆதாரமற்ற இதுபோன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று சுந்தர் சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version