இவரிடம் பேசாம இருந்திருந்தா.. அருணாச்சலம் படம் உருவாகி இருக்காது..! ரஜினி குறித்து சுந்தர் சி உடைத்த ரகசியம்..!

தமிழ் திரை உலகில் இன்று வரை அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் யார் என்றால் சின்ன குழந்தையும் எளிதில் சொல்லிவிடும் அது நாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று.

அன்று முதல் இன்று வரை தனது அபார ஸ்டைலின் மூலம் திரையுலகை கட்டிப் போட்டு வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி தமிழில் முன்னணி இயக்குனராக திகழும் சுந்தர் சி அருணாசலம் படம் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இவரிடம் பேசாமல் இருந்திருந்தா..

அந்த வகையில் இவர் அருணாச்சலம் பட கதையை ரஜினி சாரிடம் கேட்டதை அடுத்து எப்படியாவது ரஜினி சாரை வைத்து ஒரு படத்தை பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது எனக்கு வயது 25 தான் தொட்டிருந்தது.

மேலும் அவர் கதை சொன்ன போது ஓப்பனிங்கில் ரஜினி சர்ச்சில் நின்று மணியை அடிப்பது போல காட்சி என்று சொன்னதை அடுத்து ரஜினி என்றாலே 10 பேரை அடித்து அதன் பிறகு தான் என்ட்ரி தருவார். அப்படி இருக்கக்கூடிய இடத்தில் இப்படி ஒரு காட்சியா? என்று என் மனதில் தோன்றியது.

அருணாச்சலம் படம் உருவாக்கி இருக்காது..

எனினும் அதைப் பற்றி நான் ரஜினியின் முன் வெளிப்படுத்தாமல் கதை முடிந்த பிறகு ரஜினி சார் கதை எப்படி இருக்கிறது என்று என்னிடம் கேட்க நான் கதை சூப்பராக இருக்கிறது என்று சொல்லிவிட்டேன்.

இதனை அடுத்து மீண்டும் ரஜினி சார் கதை ஓகேவா என்று கேட்க பஞ்சு சாரிடம் பேசாமல் இருந்திருந்தால் கதை சுமாராக இருந்திருக்கும் என்று தான் சொல்லி இருப்பேன். ஆனால் அந்த இடத்தில் ரஜினி சாரிடம் எல்லா படத்திலும் பணத்தை சம்பாதிப்பது எப்படி என்று காட்டி இருப்பார்கள்.

ரஜினி குறித்து சுந்தர் சி வெளியிட்ட ரகசியம்..

ஆனால் இந்த படத்தில் பணத்தை எப்படி செலவு செய்வது என்று காட்டி இருப்பதால் படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. எனவே எப்படியும் ரஜினி படம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் அவர் சொன்ன கதைக்கு ஓகே என்று சொன்னேன்.

இப்படி ஆரம்பித்தது தான் அருணாசலம் திரைப்படம் என்று ஓபனாக சுந்தர் சி கூறிய பேச்சானது பலரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது. மேலும் இதனை பற்றி தற்போது ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

அவர்களுக்குள் பேசி வருவதோடு இந்த விஷயத்தை இணையங்களில் வைரலாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version