பேர் மட்டும் தான் என்னுது.. படத்தை நான் இயக்கல.. குண்டை தூக்கி போட்ட இயக்குனர் சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஆன சுந்தர் சி 2000 காலகட்டத்தில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.

முதன் முதலில் இவர் இயக்குனராக தான் அறிமுகமானார் இயக்குனராக இவர் அறிமுகமாவதற்கு முன்னர் பிரபல இயக்குனரான மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.

இயக்குனர் சுந்தர் சி:

அதன் மூலம் படம் எடுக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்து அதன் பின்னர் இயக்குனராக அறிமுகமாகி இவர் இயக்கி வெளிவந்த முதல் திரைப்படம் “முறை மாமன்”.

அந்தப் படம் கலகலப்பான காமெடி காட்சிகள் நிறைந்த மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. முதல் படமே மாபெரும் வெற்றி படமாக சுந்தர் சிக்கு அமைந்தது.

அந்த படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகளை இன்று வரை மக்கள் யாராலும் மறக்கவே முடியாது.

அந்த படத்திற்கு பின்னர் இவருக்கு படம் இயக்க அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் வாய்ப்புகள் கொடுத்து லைனில் காத்திருந்தார்கள்.

முறை மாப்பிள்ளை படத்தில் இருந்து விலகியது ஏன்?

அப்படி அவரது இரண்டாவது படமாக வந்த வாய்ப்பு தான் முறை மாப்பிள்ளை. இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக கம்மிட் ஆக இருந்தார்.

திட்டமிட்டது படியே அந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி இருக்கிறது. அதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு ஆரம்பமானதாம்.

ஆனால் ஒரு கட்டத்தில் உள்ளதை அள்ளித்தா படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்ட நிலையில் சுந்தர்சியால் முறை மாப்பிள்ளை படத்தை தொடர முடியவில்லை.

இதனால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டாராம். காரணம் தேதிகளில் பிரச்சனை வந்துவிட்டது என கூறி முறை மாப்பிள்ளை படத்தின் தயாரிப்பாளரிடம் சுமூகமாக பேசி எந்த பிரச்சினையும் இல்லாமல் அந்த படத்தில் இருந்து வெளிவந்தாராம்.

பெயர் மட்டும் தான் என்னுடையது:

அதன் பிறகு அருண் விஜய் வைத்து முறை மாப்பிள்ளை பாடத்தை வேறொரு இயக்குனர் இயக்கி இருந்தார். கிட்டத்தட்ட 25% பங்களிப்பு அந்த படத்தில் என்னுடையது தான்.

இருந்தாலும் அந்த படத்தின் பெயரான “முறை மாப்பிள்ளை” என்பது மட்டும்தான் எனக்கு சொந்தமானது அதில் கிட்டத்தட்ட உழைப்பு அனைத்துமே வேறொரு இயக்குனருக்கு சொந்தமானது.

எனவே நான் எப்போதும் என்னுடைய இரண்டாவது படமாக எடுத்துக் முறை மாப்பிள்ளை படத்தை கொண்டதே கிடையாது.

உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் தான் என்னுடைய இரண்டாவது திரைப்படமாக நான் நினைத்துக் கொள்வேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் சுந்தர் சி பேசியிருக்கிறார்.

காமெடிக்கு பஞ்சம் வைக்காத சுந்தர் சி:

சினிமாவில் தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்கள் இயக்கி ஒவ்வொரு படத்திலும் மிகச்சிறந்த காமெடிகளை வைத்து கலகலப்பாக சிரிக்க வைப்பவர் சுந்தர்சி.

இதனாலே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். கடைசியாக சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் அரண்மனை 4.

இந்த திரைப்படம் மூன்றாம் தேதி வெளியாகிய ஓரளவுக்கு கலவையாக விமர்சனத்தை பெற்றிருந்தது. இருந்தாலும் ஒரே மாதிரி இருப்பதாக சிலர் கூறினார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version