இதனால தான் மதகஜ ராஜா இன்னும் ரிலீஸ் ஆகல.. முதன் முறையாக போட்டு உடைத்த சுந்தர் சி..!

உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது, ஒரு முன்னணி இயக்குனர் இயக்கிய படம், முன்னணி நடிகர், நடிகையர் நடித்த படம் 11 ஆண்டுகளாகியும் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் தூங்குகிறது என்றால் அது எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை அந்த படத்தில் கலைஞர்களுக்கு தரும் என்பதுதான்.

ஆனால் அது உண்மையில் நடந்திருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு படம், இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இயக்குனர் சுந்தர் சி

இயக்குனர் சுந்தர் சி உள்ளத்தை அள்ளித் தா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முறைமாமன், அருணாசலம், மேட்டுக்குடி, அன்பே சிவம், வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், அரண்மனை, ஆம்பள போன்ற படங்களை தந்தவர்.

நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சுந்தர் சிக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.

மதகஜராஜா

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் விஷால் கதாநாயகனாக நடித்து உருவான படம் மதகஜராஜா. இந்த படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை டைரக்ட் செய்தவர் இயக்குனர் சுந்தர் சி. 11 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

இதையும் படியுங்கள்: “ஷூட்டிங் ஸ்பாட்டில் அதெல்லாம் சாதாரணமா நடக்கும்.. என் புருஷன் கூடவே இருப்பாரு..” நீலு ஆண்ட்டி பேச்சு..!

11 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகல

சமீபத்தில் அரண்மனை 4 படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் நடிகர் சுந்தர் சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதகஜராஜா படம் எப்போது திரைக்கு வரும், அந்த படம் ரிலீஸ் ஆவதில் 11 ஆண்டுகளாக தாமதம் நீடிப்பது ஏன் என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களுக்கு பதிலளித்த சுந்தர் சி, அந்த படம் வெளியாகாமல் 11 ஆண்டுகளாக தாமதம் நீடிக்கிறது. இப்போது அந்த படம் ரிலீஸ் ஆகிய தியேட்டர்களுக்கு வந்தாலும் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும்.

கெஞ்சி பார்த்துட்டோம்

நானும் விஷாலும் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திடம் பலமுறை பேசி பார்த்துவிட்டோம். கெஞ்சியும் கூட கேட்டுப் பார்த்தோம். நாங்களே பணத்தை கொடுத்து அந்த படத்தை ரிலீஸ் செய்வதாகவும் கூறினோம்.

அந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்துக்கு, ஏற்கனவே ஏற்பட்ட ஒரு படத்தின் இழப்பு காரணமாக, இந்த படத்தை வெளியிட மறுக்கின்றனர். இன்றளவும் அந்த படத்தை வெளியிடாமல் இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: நடிகர் பிரபு இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்.. ஒரு பார்வை..!

தயவு செய்து வெளியிடச் சொல்லுங்க

தி நகர் பக்கம்தான் அந்த தயாரிப்பு அலுவலகம் உள்ளது. உங்களில் யாரேனும் கூட என் சார்பாக பேசி, அந்த படத்தை தயவு செய்து வெளியிடச் சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார் சுந்தர் சி.

தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தான் மதகஜ ராஜா இன்னும் ரிலீஸ் ஆகல என்கிற உண்மையை முதன் முறையாக போட்டு உடைத்து விட்டார் சுந்தர் சி.. இனியாவது அந்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முன்வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam