பொதுவாகவே நல்ல நிறமாக இருக்கும் நடிகைகளுக்குதான் வாய்ப்பு என்பது அதிகமாக இருக்கும். நிறம் குறைவாக இருக்கும் நடிகைகள் மிக அரிதாகதான் சினிமாவிலும் சரி சின்னத்திரையிலும் சரி வாய்ப்பை பெறுகின்றனர்.
அப்படி இருந்தும் அவற்றையெல்லாம் தாண்டி தன்னுடைய திறமையை பயன்படுத்தி சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.
இவர் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறமையின் காரணமாக நிறமெல்லாம் கதாநாயகி ஆவதற்கு ஒரு முக்கியமான விஷயம் கிடையாது என்பதை உடைத்து எறிந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
மேலும் அவர் பேசும் விதமும் கிராமத்து பாஷையில்தான் இருக்கும் என்றாலும் கூட அதையும் கூட மாற்றிக் கொள்ளாமல் அதையே தனக்கான அடையாளமாக மாற்றிக் கொண்டு கிட்டதட்ட ரஜினிகாந்த் போலவே அதை ஒரு ஸ்டைலாக மாற்றிவிட்டார்.
மைனஸை ப்ளஸ்ஸாக மாற்றி கொண்டவர்:
ரஜினிகாந்திற்கும் இப்படித்தான் தமிழ் அவ்வளவு சரியாக வராது. ஆனால் அதையே அவர் தனக்கான ஸ்டைலாக மாற்றிக் கொண்டார் இப்படி தன்னுடைய எதிர்மறையான விஷயங்களை நேர்மறையாக மாற்றும் திறன் கொண்டவர்கள்தான் சினிமாவில் வெகு காலங்கள் பயணித்திருக்கின்றனர்.
கேப்ரில்லா திருச்சியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். 12ஆம் வகுப்புக்கு பிறகுதான் இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் குறும்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்த சமயத்தில்தான் இணையதளம் வளர்ச்சி அடைந்தது. அதனை தொடர்ந்து டிக் டாக் மாதிரியான சமூக வலைதளங்கள் அதிக வளர்ச்சியை பெற்றன. இதனை தொடர்ந்து டிக் டாக்கில் வீடியோ செய்வது போன்றவற்றை செய்ய தொடங்கினார்.
சின்ன திரையில் வாய்ப்பு:
இதற்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது அப்பொழுது இந்த மாதிரியான டிக் டாக்கில் பிரபலமாக இருப்பவர்களுக்கு சினிமாவிலும் சின்ன திரையிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அந்த விதத்தில்தான் சீரியலில் வாய்ப்பை பெற்றார் கேப்ரில்லா.
சீரியலில் வாய்ப்பு பெற்றவுடனே பெரிய இடத்திற்கெல்லாம் சென்றுவிடவில்லை. அதற்காக நிறைய போராடி இருக்கிறார் கேப்ரில்லா. நாடகங்களில் எப்பொழுதும் அடக்க ஒடுக்கமான ஆடையில் வரும் கேப்ரில்லா பொது நிகழ்ச்சிகளிலும் கூட அப்படித்தான் வருவார்.
ஆனால் தற்சமயம் அவர் கொஞ்சம் பிரபலமான பிறகு அவரது முகத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். மேலும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட தொடங்கி இருக்கிறார். அதன் மூலம் அடுத்து கதாநாயகி ஆவதுதான் அவரது டார்கெட் என்பது தெரிகிறது. இந்த நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.