இதற்கு அடிமையானேன்.. வாழ்கையை இழந்தேன்.. கூச்சமில்லாமல் கூறிய சுந்தாரா ட்ராவல்ஸ் ராதா..!

தமிழ் திரை உலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த நகைச்சுவை திரைப்படமான சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ராதா தற்போது தான் காதலித்ததின் காரணத்தால் தன் வாழ்க்கையை இழந்ததை பற்றி பேசி இருக்கிறார்.

மேலும் இவர் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று இண்டஸ்ட்ரியிலிருந்து காணாமல் போனதற்கு இவரது காதல் தான் காரணமா? என்று கேட்கக் கூடிய வகையில் இவரது பேச்சு உள்ளது.

சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா..

சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா ஆந்திராவை பூர்வீகம் கொண்டவர்.இவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த பின் சுந்தரா டிராவல்ஸ்சில் நடித்ததை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

அந்த வகையில் இவர் சுந்தரா டிராவல்ஸ் படத்தை அடுத்து 2005 – இல் கேம் என்ற திரைப்படத்தில் நடித்ததோடு சத்யராஜ் நடிப்பில் வெளி வந்த அடாவடி என்ற திரைப்படத்தில் 2007 – ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

மேலும் 2008-ஆம் ஆண்டு கரண் நடிப்பில் வெளி வந்த காத்தவராயன் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.

இவர் படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து இருக்கக் கூடிய இவர் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த பைரவி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பெரும்பாலான மக்களின் மத்தியில் பேமஸான நடிகையாக மாறினார்.

இதற்கு அடிமையானேன் வாழ்க்கையை இழந்தேன்..

இதனை அடுத்து தற்போது விஜய் டிவி சீரியல் தொடரான பாரதி கண்ணம்மா பகுதி இரண்டில் நடித்து வருகிறார். மேலும் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராதா சுந்தரா டிராவல்ஸ்-க்கு பிறகு சில படங்களில் தான் நடித்திருப்பதாக கூறினார்.

மேலும் 2012-ஆம் ஆண்டு தான் ஒருவரை காதலித்ததாகவும் இதனால் தான் இவரது வாழ்க்கை படுமோசமாக போனதாகவும் கூறியிருக்கிறார்.

அத்துடன் தான் அன்புக்கு அடிமையாகி விட்ட நிலையில் தன்னுடைய அம்மா சினிமாவில் கவனத்தை செலுத்தும் படி கூறியதாக சொன்னார்.

கூச்சம் இல்லாமல் பேசிய சுந்தரா டிராவல்ஸ் நடிகை..

இதனை அடுத்து எனக்கு நல்ல பாசிட்டிவான கேரக்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன் என்று சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா கூறினார்.

இதனை அடுத்து தான் பாரதி கண்ணம்மா பகுதி இரண்டில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது என உருக்கமாக பேசியது பலரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் காதலால் தன் வாழ்க்கை இழந்ததை பற்றி மிகச் சிறப்பான முறையில் அனைவரையும் உருக்கக்கூடிய விதத்தில் சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா பேசியிருப்பது பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version