நடிகை சன்னி லியோன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது.
பாதுகாப்பான உடலுறவை தான் நான் நம்புகிறேன். எப்போதுமே அந்த நம்பிக்கையில் இருந்து நான் விலகியது கிடையாது.
என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒரு பகுதி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
அதில் முக்கியமான நம்பிக்கை பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வது என கூறி இருந்தார்.
தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக ஆணுறையை பயன்படுத்துமாறு என்னுடைய ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
பாதுகாப்பான உடலுறவு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கும் என தன்னுடைய கருத்தை முன் வைத்திருந்தார்.
அதே சமயம் நான் அப்படியான படங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை கூறுகிறேன்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது நாம் கவனிக்காத நேரத்தில்.. நம்முடைய கவனம் வேறு பக்கம் இருக்கும் நேரத்தில்.. ரகசியமாக ஆணுறையை நீக்கிவிட்டு அதனை தொடர முயற்சி செய்திருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் கவனமாக இருந்து அதனை தடுத்திருக்கிறேன். எனவே, வேண்டுமென்றோ.. அல்லது உணர்ச்சி வேகத்திலோ.. இது போன்ற விஷயங்களில் யாரும் ஈடுபடக் கூடாது. இது பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும் என கூறியிருக்கிறார் நடிகை சன்னி லியோன்.
பெண்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஏனென்றால், அப்படி ரகசியமாக ஆணுறையை நீக்கிவிட்டால் அதனால் அதிகப்படியாக பாதிக்கப்படப்போவது பெண்கள் தான். மேலும், பெண்ணுறைகளையும் பயன்படுத்தலாம் என பேசியுள்ளார் சன்னி லியோன்.