செவிடன் காதில் சங்கு ஊதின மாதிரி… நோ ரியாக்சன் ஃபார் நெகட்டிவ் கமெண்ட்ஸ் – சன்னி லியோன்…!!

பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் பெயரைக் கேட்டாலே இளைஞர்களின் மனது ஆட்டம் கண்டுவிடும் அந்த அளவுக்கு  கவர்ச்சியை தாறுமாறாக காட்டி ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வரும் இவர் வடகறி என்ற திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்காக நடனம் ஆடினார்.

 தமிழில் அதன் பிறகு அவர் நடித்துள்ள படம் தான் ஓ மை கோஸ்ட். இந்த படத்தில் இவருடன் தர்ஷா குப்தா, சதீஷ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இந்த படமானது நாளை திரையரங்குகளுக்கு வெளிவரும் நிலையில் உள்ளது.

மேலும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக சென்னைக்கு வருகை தந்திருந்த  சன்னி லியோன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த ஆண்டு தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்திருப்பதாக கூறியிருக்கிறார்.

 மேலும் ஊரடங்கு கால கட்டத்திற்கு பிறகு இவருக்கு விதவிதமான கேரக்டர் ரோல்கள் அமைந்திருப்பதாகவும் அதனை சரிவர தான் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார்.

 ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் இவர் இளவரசியாகவும் பேயாகவும் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். இந்த படத்தின் நடிக்கும் போது வெயிட்டான வாளினை தூக்கும் போதும் கிலோ கணக்கில் உடையை அணிந்திருந்த இவருக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டதாக கூறி இருக்கிறார்.

 அது மட்டுமல்லாமல் இந்த மேக்கப் போடுவதற்கு தான் அதிகம் சிரமம் பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது தனக்கு தெரியாது என்றும் பேய் பயம் தனக்கு இல்லை என்றும் பேய் ஏன் மனிதனுக்கு தீமையை செய்யும் என்று அனைவரும் சொல்லுகிறார்கள் என்ற கேள்வி அவருக்குள் அடிக்கடி ஏற்படுகிறதாக கூறினார்.

 மேலும் இவரைப் பற்றி எந்தவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டு கொள்ளாமல் போய்விடுவாராம் நிறைய பாசிட்டிவான விஷயங்களை பேசும்போது எதிர்மறையான விஷயங்களை பேசி ஏன் மனிதன் இருக்க வேண்டும் என்ற கேள்வியையும்  முன் வைத்திருக்கிறார்.

 தன்னை பற்றி அதிக அளவு வரக்கூடிய நெகட்டிவ் விமர்சனங்களை பற்றி இவர் கவலைப்பட்டுக் கொள்ளாமல் சினிமாவில் எந்த அளவு நடிக்கலாம் என்பதில் தீவிரமாக தீவிரமாக உள்ளதாக கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version