சட்டையை மடித்துக்கட்டி.. குலுங்க குலுங்க நம்ம ஊரு குத்தாட்டம் போடும் சன்னி லியோன்..!

 

ஹாரர்  மற்றும் நகைச்சுவை படமான ஓ மை கோஸ்ட் பேய் படத்தில் சன்னி லியோன்  செமயா கும்மாங்குத்து ஆடியிருக்கிறார். அதுவும் நம்ம ஊர் ஸ்டைலில் லுங்கியை கட்டி குத்து குத்துன்னு குத்தி  கிழி… கிழி… கிழித்து இருக்கிறார்.

 விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த திகில் நிறைந்த ஹாரர் மூவி யானது VAU மீடியா எண்டர்டைமெண்ட் மற்றும் ஓய்ட் ஷார்ச் ஸ்டுடியோ சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் அவர்கள் இந்த படத்தை வழங்குகிறார்.

மேலும் இதில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த பாடத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பின்னணி இசையமைக்கிறார். இத்துடன் தீபக் D.மேனன்  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் சன்னி லியோன் மூன்று விதமான கேரக்டர்களில் நடித்து இருப்பதாக கூறுகிறார்கள். இவர் நடிப்பு பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

 இந்த கதையானது வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட கதை என்பதால் நகைச்சுவையோடும் பார்ப்பதற்கு மிகவும் திரில்லாக இருக்கும் என்று இப்பட எழுத்தாளர் கூறியிருக்கிறார்.

 இதில் சன்னி லியோனின் கதாபாத்திரம் வித்தியாசமான வேடத்தில் இருப்பதால் ரசிகர்கள் பார்க்கும்போது திரிலாகவும், பயமாகவும் இருக்கும். இந்த படத்தின் சிங்கிள் பாடலான தும்மாங்கா என்கிற பாடலின்  சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலுக்காக தான் தென்னிந்திய ஸ்டைலில் சன்னி லியோன் லுங்கி கட்டிய சும்மா கும்மாங்குத்து ஆடி கலக்கியிருக்கிறார்.

எனவே ரசிகர்கள் அனைவரும் இந்தப் பாடலை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறார்கள். அது போல திரைப்படம் எப்போது வரும் ஓமைகாட்… ஓமைகோஸ்ட்யை பார்க்க வேண்டாமா… என அடுக்குத் தொடரில் வசனங்கள் பேசி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …