அதுக்கு வரணும்னா 3 லட்சம்.. ரேட் பேசி சிக்கலில் மாட்டிய நடிகை அபர்ணதி.. என்ன கொடுமை இது..?

ஒரு சில திரைப்படங்களில் நடித்து கொஞ்சமாக பிரபலமான நடிகையாக நடிகை அபர்ணதி இருந்து வருகிறார். இப்பொழுதும் பெயர் தெரியும் அளவிற்கு மக்கள் மத்தியில் இன்னும் இவர் பிரபலமாகவில்லை. தமிழில் இறுகப்பற்று மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அபர்ணதி கும்பகோணத்தை சேர்ந்தவர். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டில் பிறந்த பெண்கள் நடிகைகள் ஆவது அரிதாகவே நடந்து வருகிறது. அந்த வகையில் இவர் கொஞ்சமாக பிரபலம் ஆகி தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.

சின்னத்திரையில் அறிமுகம்:

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி துவங்கிய பொழுது அதில் ஆர்யாவிற்கு பெண்பார்க்கும் படலமாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது அதில் முதன் முதலாக கலந்து கொண்டதன் மூலம் அபர்ணதிக்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் அவர் நடித்த இறுகப்பற்று திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்ற படமாக இருந்தது. அவருக்கு அதில் நல்ல கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் நாற்கரபோர் என்கிற படத்தில் 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் நடிகை அபர்ணதி.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் அவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சுரேஷ் காமாட்சி நடிகை அபர்ணதி குறித்து குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

அபர்ணதி செய்த செயல்:

அதில் அவர் கூறும் பொழுது அபர்ணதியை படத்தின் தயாரிப்பாளர் பிரமோஷனுக்காக போன் செய்து வர சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் நான் வரமாட்டேன் எனக்கு ப்ரமோஷனுக்கு தனியாக காசு கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் வருவேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தை தயாரிப்பாளர் என்னிடம் கூறினார். எனவே பிறகு நான் அபர்ணதிக்கு போன் செய்து பேசினேன். என்னிடமும் வர முடியாது என்றுதான் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல் சில கண்டிஷனும் அவர் முன் வைத்தார்.

மேடையில் யார் பக்கத்தில் உட்கார வேண்டும் என்பது வரை கண்டிஷன் போட்டார். எனக்கு சமமானவர்களுக்கு அருகில்தான் நான் உட்கார வேண்டும் என்று அவர் கூறியதும் எனக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. எனவே நான் இது குறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளிப்பேன் என்று கூறினேன்.

அதற்கு அவர் நான் முதலில் நடிகர் சங்கத்திலேயே இல்லை என்று கூறிவிட்டார். மூன்று லட்சம் கொடுத்தால்தான் நிகழ்ச்சிக்கு வருவேன் இல்லை என்றால் வரமாட்டேன் என்று கூறிவிட்டார். அந்த மூன்று லட்சத்தை ஏதாவது நல்ல விஷயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி அவரை வரவேண்டாம் என்று நான் கூறிவிட்டேன். இப்படிப்பட்ட நடிகைகளே சினிமாவிற்கு தேவை இல்லை என்று கூறியிருந்தார் சுரேஷ் காமாட்சி தற்சமயம் இது அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam