இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்திற்கு பை சொன்ன சூர்யா…!! இப்ப வாடிவாசல் விட்டு வெளியேறுகிறாரா?

ஜெய் பீம், சூரரைப்போற்று படங்களை அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை பெற்ற சூர்யா தற்போது படு பிஸியாக சிறுத்தை சிவா தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 மேலும் இந்தத் திரைப்படமானது முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் உருவாக்கி வரக்கூடிய பிரம்மாண்டமான திரைப்படமாக இருப்பதால் சூர்யாவுக்கு இது மாபெரும் வெற்றியும் தமிழ் திரை உலகுக்கு புதுமையான படங்களின் வரிசையில் ஒன்றாகவும் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதை அடுத்து இந்த படத்தில் இவரோடு ஜோடியாக பாலிவுட் நடிகையான தீஷா பதானி நடிக்கிறார். இந்த சூழ்நிலையில் இயக்குனர் பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா தற்போது விலகியது அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இவரிடம் கேட்காமல் கதை அம்சங்களில் மாற்றம் செய்வதற்காகவும் மேலும் பல காரணங்களுக்காகவும் அந்த திரைப்படத்தில் நடிக்காமல் அதிலிருந்து வெளியேறிய அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வேண்டிய இந்த படத்தை தயாரிக்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

 இதுபோலவே மற்றொரு படமான வாடிவாசல் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ள நிலையில்  அந்தப் படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்  இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாத நிலையில் என்ன படத்திலிருந்தும் நடிகர் சூர்யா விலகுவதாக இணையத்தில் வைரலாக செய்திகள் பரவியது.

 இதனை அடுத்து எந்த படத்தில் கண்டிப்பாக சூர்யா நடிப்பார்.அது மட்டுமில்லாமல் இவர் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று வெற்றிமாறன் அறிவித்த பின் தான் ரசிகர்கள் அனைவரும் அமைதி அடைந்தனர்.

 விரைவில் அந்த படத்தின் அப்டேட் பற்றிய முழு செய்திகள் விரைவில் வெளிவரும் என்று கூறி இருக்கிறார்கள். இதை எடுத்து சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version