சூர்யா பெண் ஆசை.. கடுப்பில் ஜோ..! கர்ப்பமான நடிகை..? ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் நடிகர் சூர்யா குறித்தும் அவருடைய ஆரம்பகால காதல் மற்றும் தற்பொழுது அவர் T10 கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியை விலைக்கு வாங்கி இருப்பது உள்ளிட்ட தகவல்கள் பற்றி பேசி இருக்கிறார்.

அதில் பேசிய அவர் ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவை காதலிக்க ஆரம்பித்த நடிகை ஜோதிகா அவரை தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார். அதனால் நடிகர் சூர்யா பேர் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை விரும்பாமல் சூர்யாவிற்கு வேறு நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என்றெல்லாம் கட்டளை போட்டிருக்கிறார்.

ஆனாலும் ஒரு சில படங்களில் வேறு நடிகையுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சி இருந்திருக்கின்றது. அப்படியான காட்சிகள் படமாக்கப்படும் போதெல்லாம் நடிகை ஜோதிகா அந்த இடத்தில் இருப்பாராம்.

இப்படி தன் முன்னால் தான் எதுவாக இருந்தாலும் நடக்க வேண்டும் என்ற அளவுக்கு சூர்யா மீது காதலுடன் இருந்திருக்கிறார் நடிகை ஜோதிகா. ஒரு கட்டத்தில் ஜோதிகா சூர்யா காதலிக்கிறார்கள் என்ற விபரம் ஊடகங்கள் வாயிலாகவும் கிசுகிசு வாயிலாகவும் சூர்யாவின் குடும்பத்தினரையும் அவருடைய தந்தை சிவக்குமாரையும் எட்டி இருக்கிறது.

இதனால் சிவக்குமார் கடும் அதிரத்தில் இருந்திருக்கிறார். சிவகுமார் பற்றி கூற வேண்டும் என்றால்… அவர் தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கண்டேயன் மட்டுமல்ல.. ஒரு நல்ல மனிதர்.. நல்ல ஆன்மீகவாதி.. நல்ல தமிழ் பண்பாளர்.. 1330 குறளையும் நுனி நாக்கில் வைத்திருப்பவர்.

கூடவே அவருக்கு ஜாதி பாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. எனவே தான்.. தன்னை எத்தனையோ நடிகைகள் காதலித்தும் தன்னுடைய பெற்றோர்கள் பார்த்து வைத்த தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் சிவகுமார்.

இதனால் தான் எந்த நடிகைகளுடனும் காதலில் விழாமல் நல்ல பெயர் எடுத்தார். இதனாலேயே அவரை சுற்றி எந்த கிசுகிசுவும் வந்தது கிடையாது. ஆனால் தன்னுடைய மகன் இப்படி ஒரு நடிகையை காதலிக்கிறான் என்று ஆரம்பத்தில் கடுப்பாகி இருக்கிறார் சிவக்குமார்.

ஒரு கட்டத்தில் நடிகை ஜோதிகா கர்ப்பம் ஆகிவிட்டார் என்று கூட கிசு கிசுக்கள் வந்தன. சூர்யா ஜோதிகாவின் திருமணம் நடப்பதற்குள் அவர்களை சுற்றி என்ன என்ன கிசுகிசு வந்தது என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இப்படி தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தது காரணமாக இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அரை மனதுடன் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் சிவகுமார்.

ஆனால் தற்பொழுது நடிகர் சூர்யா தன்னுடைய தந்தையை விட்டுவிட்டு மும்பையில் போய் செட்டில் ஆகிவிட்டார். மட்டுமில்லாமல் சிவகுமாருக்கு அறவே பிடிக்காத சூதாட்டங்களில் ஒன்றால் கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கி இருக்கிறார்.

கிரிக்கெட்டும் ஒரு விதமான சூதாட்டம் தான். நடிகை ஜோதிகா தன்னுடைய தாயை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மும்பைக்கு சென்று இருக்கிறார்.

அவருடனே சென்று செட்டில் ஆகிவிட்டார் நடிகர் சூர்யா. இந்த கொடுமை எந்த ஊரிலாவது நடக்குமா..? திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டுக்கு வந்து விட்டால் தான் பிறந்த வீட்டுக்கு உறவினர் போலத்தான் செல்ல வேண்டும் வரவேண்டும்..

ஆனால் ஜோதிகா அங்கேயே போய் தங்கி இருக்கிறார். இதெல்லாம் எண்ணி சிவகுமார் கடுப்பில் இருக்கிறார் என்று பேசியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam