தெலுங்கில் சக்கை போடு போடும் படம் 3 சுருதிஹாசன் காட்டில் நல்ல மழை!

2012ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் 3  ஓரளவு வசூலில் சாதனை புரிந்து ஐஸ்வர்யாவுக்கு இயக்குனர் என்ற பெயரை பெற்றுத்தந்தது.

 அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு ஆந்திராவில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த 3 படத்தை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி வந்தவண்ணம் இருப்பதோடு இந்த படத்தை ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக மாற்றி இருக்கிறார்கள்.

3 படத்தில் சுருதி ஹாசனின் நடிப்பை ரசிகர்கள் மிகவும் ஆர்வமோடு பார்த்ததோடு பல்வகையான விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். இவரின் நடிப்பை கண்டிப்பாக பாராட்டித்தான் ஆகவேண்டும் என்று இவரை பாராட்டி வருவதோடு மட்டுமல்லாமல் கருத்துக்களை  இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

 இதனால் மிகவும் உற்சாகமான மனநிலையில் சுருதிகாசன் இருப்பதாக தெரிகிறது. தற்போது இவர் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவரவுள்ள சலார்  படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை  பிரசாத் நீல் இயக்குவதாக தெரிகிறது.

மேலும் 3 திரைப்படம் தெலுங்கில் வரக்கூடிய படங்களுக்கு முன்னோட்டமாக இந்த படம் அமையும் என்று சுருதிஹாசன் கருதுகிறார்.  இந்த படத்தில் இவருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு வர இருக்கக்கூடிய தெலுங்கு படங்களுக்கு  ரசிகர்களை அதிகளவு இழுத்து மிகப்பெரிய வசூலை செய்யும் என்று கருதுகிறார்கள்.

இவரும் மற்ற நடிகைகள் போல போட்டோஷூட் நடத்தியதோடு மட்டுமல்லாமல் தன் காதலனோடு இருக்கின்ற புகைப் படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தது அனைவருக்கும் தெரியும்.

உலக நாயகனின் மகளான  சுருதிஹாசனுக்கு தற்போது தமிழில் எந்த வாய்ப்புகளும் இல்லாத நிலையில் தெலுங்கில்  தமிழ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு சுருதிஹாசனின் காட்டில் மிக அதிக அளவு மழை பெய்கிறது என்பது தான் உண்மை.

மேலும் இவர்கள் எதிர்பார்ப்பது போல் இனி வரக்கூடிய தெலுங்கு படங்கள் அனைத்தும் வெற்றி பெறுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …